ரூ.7½ லட்சம் வரை கல்விக் கடன் பெற எந்த உத்தரவாதமும் அளிக்க தேவையில்லை!


ரூ.7½ லட்சம் வரை கல்விக் கடன் பெற எந்த உத்தரவாதமும் அளிக்கதேவையில்லை என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகம் படுத்துகிறது. மாணவர்களின் படிப்புக்கு பணம்இடையூறாக இருக்க கூடாது என்று மத்திய அரசு உயர் கல்விக் கடன்திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

மருத்துவம், என்ஜினீயரிங்உள்ளிட்ட தொழிற் கல்வி பயிலும் மாணவர்கள் கல்விக் கடனை பெறலாம். இந்த திட்டத்தின்படி உள்நாட்டில் படிக்க அதிக பட்சம் ரூ.10 லட்சமும், வெளிநாட்டில் படிக்கரூ.20 லட்சமும் கடனாக வழங்கப்படுகிறது.மாணவர்கள் பெறும்கடன் ரூ.4 லட்சம் அல்லது அதற்கு குறைவாக இருந்தால் குறைந்தபட்ச வட்டி கணக்கிடப்படும். ரூ.4 லட்சத்துக்கு மேல் கல்விக்கடன் இருந்தால் வட்டி தொகையுடன் ஒரு விழுக்காடு தொகைசேர்த்து வசூலிக்கப்படும். ஆனால் வட்டி விகிதம் வங்கிகளுக்கு வங்கி மாறுதலுக்குரியது.ரூ.4 லட்சம் வரையிலான கடன்தொகைக்கு ஜாமீன் கேட்பது இல்லை. ரூ.4 லட்சத்துக்கு மேல் கடன்தொகை கேட்டால் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.இதில் தான்தற்போது மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்து புதிய திட்டத்தைஅறிமுகப்படுத்த உள்ளது. இதன்படி ரூ.7½ லட்சம் வரை கல்விக் கடன்பெறுபவர்கள் எந்தவித ஜாமீனோ அல்லது உத்தரவாதமோ அளிக்கதேவையில்லை. இந்த திட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டுவர இருக்கிறது. இதை மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர்தெரிவித்தார்.

இந்த திட்டத்தின்படி கடன் தொகையை மாணவர்கள் 20ஆண்டுகளில் திரும்ப செலுத்தும் சலுகையும் இடம் பெறுகிறது.படிப்பு முடிந்து வேலை கிடைத்த ஒரு ஆண்டு அல்லது படிப்பு முடிந்த1 ஆண்டுக்கு பிறகு கடனை திரும்ப செலுத்த வேண்டும். முன்புவேலை கிடைத்த 6 மாதம் என்று இருந்தது. மேலும் கல்விக் கடனைபுதிய திட்டத்தின்படி வட்டி விகிதம் 2 சதவீதத்துக்கு மேல் இருக்காது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்ததிட்டத்துக்காக மத்திய அரசு 5 ஆண்டுக்கு ரூ.3,500 கோடி ஒதுக்க இருக்கிறது. முதல் ஆண்டுக்கு ரூ.500 கோடியை ஒதுக்கி இருக்கிறது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி