கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு - தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் பல்வேறு பணிகளில் நிரப்பப்பட உள்ள 1007 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கால்நடை ஆய்வாளர் காலிப்பணியிட எண்ணிக்கை 289 மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் காலிப்பணியிட எண்ணிக்கை 718 - விண்ணப்பிக்க கடைசி தேதி 25.9.2015

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் பல்வேறு பணிகளில் நிரப்பப்பட உள்ள 1007 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க கடைசி தேதி 25.9.2015  



1. பணி: கால்நடை ஆய்வாளர் நிலை -2 (பயிற்சி)
காலியிடங்கள்: 294
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400 மற்றும் இதர சலுகைகள்.

2. பணி: கதரியக்கர் (Radiographer)
காலியிடங்கள்: 24
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Radiological Assistant கோர்ஸ் முடித்து இருக்க வேண்டும். அத்துடன் இயற்பியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800 மற்றும் இதர சலுகைகள்.

3. பணி: ஆயாவக உதவியாளர்
காலியிடங்கள்: 17
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,400 மற்றும் இதர சலுகைகள்.

4. பணி: ஆய்வுக் கூட தொழில்நுட்பாளர்
காலியிடங்கள்: 02
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெட்ராஸ் கால்நடை மருத்துவக் கல்லூரி நடத்தும் 12 மாத கால ஆய்வுக் கூட தொழில்நுட்பாளர் கோர்ஸ்ம் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400 மற்றும் இதர சலுகைகள்.

 5. பணி: மின்னாளர் (Electrician)
காலியிடங்கள்: 03
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல் ஒயரிங் டிரேடில் ஐடிஐ அல்லது டிப்ளமோ முடித்து 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400 மற்றும் இதர சலுகைகள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் வைத்து நடத்தப்படும்.

6. பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 36
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300 மற்றும் இதர சலுகைகள்.

7. பணி: கால்நடை பராமரிப்பு உதவியாளர்
காலியிடங்கள்: 725
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,400 மற்றும் இதர சலுகைகள்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு கால்நடை பராமரிப்பு மருத்துவப் பணிகள் இயக்குநரகத்தில் நடைபெறும்.

வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பு தளர்வு அளிக்கப்படும்.விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை இயக்குநர், கால்நடை பராமரிப்பு (ம) மருத்துவப் பணிகள், சென்னை - 6 என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் தேசியமயமாக்கப்பட்ட ஏதாவதொரு வங்கியில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் சுய சான்று செய்து வங்கி டி,டி. இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.09.2015

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Director, Department of Animal Husbandry and Medical Service, Central Office Building, Block-II, DMS Complex, Chennai - 600006.

மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய www.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.


Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி