கல்விக் கடன் வட்டிக்கு 100 சதவீத மானியம்.

பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்குள் இருக்கும் மாணவர்களின் கல்விக் கடனுக்கு 100% வட்டி மானியம் வழங்கப்படுகிறது. இச்சலுகையைப் பெற, பெற்றோரின் வருமானச் சான்றிதழை அக்டோபர் 6ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், மாணவர்களுக்கு வங்கிகள் கல்விக்கடன் வழங்கி வருகின்றன. பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 4.5 லட்சத்துக்குள் இருந்தால், அவர்களது பிள்ளைகள் பெறும் கல்விக் கடனுக்கு 100% வட்டி மானியம் வழங்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை 2009 ல் அறிவித்தது.

மேலும், கடன் தொகையை திருப்பிச் செலுத்த மாணவர்கள் தங்கள் படிப்பு முடிந்து ஒருவருடம் வரை அவகாசம் அளிக்கப்பட்டது. படிப்புக்காலம் மற்றும் இந்த ஓராண்டு காலம் வரை மட்டுமே வட்டிக்கு 100% மானியம் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

2009 முதல் 2014 வரை வழங்கப்பட்ட கல்விக் கடனுக்கு இச்சலுகையைப் பெற மாணவர்கள் வருமானச் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது. கல்விக் கடனுக்கான மானியத் தொகையை அனைத்து வங்கிகளுக்கும் அளிப்பதற்காக கனரா வங்கியை தொடர்பு வங்கியாக மத்திய அரசு நியமித்துள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி