மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய ஆபிஸ் 2016-ன் முன்னோட்ட பதிப்பு அறிமுகம்


மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய ஆபிஸ் 2016-ன் முன்னோட்ட பதிப்பு அறிமுகம்

    மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது புதிய ஆபிஸ் 2016-ன் முன்னோட்ட பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.


தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஆபிஸ் 2016 பதிப்பை தனி நபர் மற்றும் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு ஐ.டி. துறையினருக்கு மட்டும் பரிசோதனை அடிப்படையில் ஆபிஸ் 2016 மென்பொருள் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்போது வெளியிடப்பட்டிருக்கும் மென்பொருளை விண்டோஸ் 7, 8 மற்றும் 10 ஆகியவை இயங்கும் லேப்டாப், டெப்லேட் மற்றும் கணினிகளில் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும். ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் ஆபிஸ் 2013 மென்பொருளை நீக்கிவிட்டு, இந்த புதிய மென்பொருளை உள்ளீடு செய்யவேண்டும்.

இந்த முன்னோட்ட பதிப்பு பற்றி மக்கள் தெரிவிக்கும் கருத்துகளை ஆராய்ந்து அடுத்து வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட மென்பொருளில் அவற்றைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சந்தை பிரிவு மேலாளர் ஜாரெட் ஸ்பாட்ரோ தெரிவித்துள்ளார்.

ஆபிஸ் 2016 முன்னோட்ட வெர்சனை, https://products.office.com/en-us/office-2016-preview என்ற இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்யலாம்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி