துறைத்தேர்வுகள் பற்றிய கேள்விகளும் - பதில்களும் - உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
1. துறைத் தேர்வுகள் என்றால் என்ன?
அரசுப்பணியாளர்களில் சார்நிலைப் பணியில் சேருபவர்களும், அமைச்சுப்பணியில் சேருபவர்களும், எழுதவேண்டிய தேர்வு.
2. துறைத்தேர்வுகள் எழுத வேண்டியதன் அவசியம் என்ன?
துறைத்தேர்வுகளில் தகுதி பெற்றால் மட்டுமே பதவி உயர்வு கிடைக்கும். துறைத் தேர்வுகளுள் ஒன்றான சார்நிலைக் கணக்கு தேர்வு பகுதி 1 ல் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஓர் ஊக்க ஊதிய உயர்வும் கிடைக்கும் .
3.நான் Group 2A சர்வீசில் தொழிலாளர் துறைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இன்னும் நியமன ஆணை துறையிலிருந்து கிடைக்கப்பெறவில்லை. நான் துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாமா?
விண்ணப்பிக்கலாம் .
4.பணியில் இல்லாமல் தற்போது போட்டித்தேர்வுக்கு படிப்பவர்களும் எழுதலாமா ?
எழுதலாம். சில பொதுவான தேர்வுகளை மட்டும் .
5. நான் VAO தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். பணியில் சேர இன்னும் 15 நாட்கள் ஆகலாம். நானும் விண்ணப்பிக்கலாமா?
விண்ணப்பிக்கலாம்
6. எல்லாத் துறையினரும் கட்டாயம் எழுதி தேர்ச்சி பெற வேண்டிய பொதுவான தாள்கள் எவை எவை?
1. TNGOM
2.Account test for subordinate officers. Part I.
7. இந்த இரண்டு தாள்களையும் எழுத எந்த புத்தகங்களை படிக்கவேண்டும்?
1. Fundamental Rules
2.Treasury codes
3.Financial codes
4.Pension Rules
5.TA Rules
6. TNGOM Book
( இவை அரசு வெளியீடுகள்)
இவற்றோடு திரு. N.A.Hariharan அவர்களின் பல்வேறு கைடுகளும் பயனுள்ளவை.
8. எப்படி விண்ணப்பிப்பது?
TNPSC இணைய தளத்தில் online மூலம் .
9. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் கட்டணத்தை போஸ்ட் ஆபீஸில் செலுத்தியிருக்க வேண்டுமா?
ஆம்.
10. கட்டணம் எவ்வளவு ?
பதிவு கட்டணம் ரூபாய்.30/- + அஞ்சலக கட்டணம் .ரூபாய் 12 + ஒவ்வொரு தாளுக்கும் தலா ரூபாய் . 50/-
மேலும் விவரங்களுக்கு
www.tnpsc.gov.in என்ற இணைய பக்கத்தை காணலாம்.