ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிப்பு செய்யப்பட்டுள்ள கணினி பயிற்றுநர் காலி பணியிடங்களுக்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தகுதியானவர்கள் பரிந்துரை செய்யப்பட இருக்கின்றனர்.
இது குறித்து விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மருதப்பன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறி்ப்பு:
இப்பணிக்கு பி.எட் தகுதியுடன் பி.எஸ்சி(கணினி அறிவியல், பி.சி.ஏ, பி.எஸ்சி தகவல் தொழில்நுட்பம்) ஆகிய பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 1.7.2014 அன்றுஅனைத்து பிரிவினருக்கும் 57 வயதுக்குள் மிகாமல் இருத்தல் வேண்டும்.
முன்னுரிமையுள்ளோருக்கான பதிவு மூப்பு:
ஆதரவற்ற விதவை அனைத்து பிரிவினரும் மற்றும் கலப்பு திருமணம் புரிந்த அனைத்து பிரிவினரும்-20.10.2014 வரையும், ஆதிதிராவிடர் அருந்ததியினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், பிற்பட்ட வகுப்பினர், முஸ்லீம் மற்றும் இதர வகுப்பினர் ஆகியோருக்கு-3.9.2011 வரையும் பதிவு செய்திருக்க வேண்டும்.
முன்னுரிமையற்றவர்கள்:
ஆதிதிராவிடர்(அருந்ததியினர்)-27.9.2010 வரையும், பழங்குடியினர்-27.9.2010 வரையும், ஆதிதிராவிடர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், பிற்பட்ட வகுப்பினர், முஸ்லீம் மற்றும் இதர வகுப்பினர் ஆகியோருக்கு 31.12.2009 வரையும் பதிவு செய்திருக்க வேண்டும்.
மேற்கண்ட கல்வித் தகுதியும், பதிவு மூப்பும் உள்ள விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள், இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை மற்றும் அசல் கல்விச்சான்றிதழ்களுடன் டிச.9ம் தேதி காலையில் நேரில் வந்து பதிவு விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் குறிப்பிட்ட நாளுக்கு பின் வருகிறவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.