சமையல் எரிவாயு மானியம் பெற இனி ஒரு விண்ணப்பம் மட்டும் போதும்

சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் இணைவதற்கு இனிஒரே ஒரு விண்ணப்பத்தை மட்டும் பூர்த்தி செய்து கொடுத்தால்போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய அறிவிப்புகுறித்து இந்தியஎண்ணெய் நிறுவனத்தின் (ஐ.ஓ.சி.) செயல் இயக்குநர் யு.வி.மன்னூர்சென்னையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:

சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம் (DBTL) நாடு முழுவதும்நவம்பர் மாதம் 15-ஆம் தேதி, 54 மாவட்டங்களில் அறிமுகம்செய்யப்பட்டது. முதல் கட்டமாக அறிமுகம் செய்யப்பட்ட இந்தத்திட்டத்தில் சேர்ந்து, வங்கிக் கணக்கு மூலம் மானியத் தொகையைப்பெறும் நுகர்வோர்கள் வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை.

அதேநேரத்தில், மானியத் தொகை வங்கிக் கணக்கில் வரவுவைக்கப்படுகிறதா என்பதை www.mylpg.in என்ற இணையதளம்மூலம் நுகர்வோர் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாடு முழுவதும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் சமையல் எரிவாயு நேரடிமானியத் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. நேரடி மானியத்திட்டத்தில், நுகர்வோரை இணைப்பதற்கான பணிகள் தற்போதுமும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ஒரே விண்ணப்பம்: இந்தத் திட்டத்தில், தற்போது நுகர்வோர்இணைவதற்காக வழங்கப்படும் பல்வேறு படிவங்களைப் பூர்த்திசெய்து அளிப்பதில் உள்ள சிரமங்கள் குறித்து எங்கள் கவனத்துக்குகொண்டு வரப்பட்டது.

இதைக் கருத்தில் கொண்டு, நுகர்வோர் அனைத்து விவரங்களையும்ஒரே விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து வழங்கும் வகையில் புதியதிட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம்.

இதுவரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காத நுகர்வோர் இனி தனித்தனியாக விண்ணப்பப் படிவங்களை எடுத்துச் செல்ல வேண்டியஅவசியம் இல்லை. ஆதார் அட்டை இருப்பவர்கள், இல்லாதவர்கள்,மானியம் பெற விரும்பாதவர்கள் என அனைவரும் ஒரேவிண்ணப்பத்தில் அனைத்து விவரங்களையும் தெரிவிக்கும்வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விண்ணப்பம்எரிவாயு விநியோகஸ்தரிடமும், இணையதளத்திலும் கிடைக்கும்.

இதற்கென எந்தவித கட்டணமும் கிடையாது. விண்ணப்பங்களுக்குகட்டணம் வசூலிக்கும் விநியோகஸ்தர்கள் பற்றியமுழுவிவரங்களுடன் நுகர்வோர் புகார் தெரிவிக்கலாம் என்றார்அவர்.

ஆதார் எண் கிடைத்தவுடன் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்: ஆதார்எண் இல்லாதவர்களும் நேரடி மானியம் பெறும் வகையில், இந்தத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஆதார் எண்இல்லாத நுகர்வோர்கள் வங்கிக் கணக்கு மூலம் மானியத்தொகையை நேரடியாகப் பெறலாம்.

இருப்பினும், அந்த நுகர்வோர் ஆதார் எண் கிடைக்கப் பெற்றவுடன்அதைப் பயன்படுத்தி மானியத்தைப் பெறுவது அவசியம். எனவே,ஆதார் எண் கிடைத்தவுடன் கட்டாயம் தெரியப்படுத்த வேண்டும்.

என்ன மாற்றம்?

புதிய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வது குறித்து இந்திய எண்ணெய்அதிகாரிகள் அளித்த விளக்கம்:

ஆதார் எண் இருந்தால்... புதிய படிவத்தை இரண்டு நகல் எடுத்து, ஒருநகலில் இடம்பெற்றிருக்கும் பகுதி ஏ, பகுதி பி-ஐ பூர்த்தி செய்துசமையல் எரிவாயு விநியோகஸ்தரிடம் வழங்க வேண்டும்.

மற்றொரு நகலை எடுத்து, அதில் இடம்பெற்றிருக்கும் பகுதி ஏ, பி, சிஆகியவற்றை பூர்த்தி செய்து விநியோகஸ்தர் அலுவலகங்களில்வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் போடலாம் அல்லது வங்கியில்நேரடியாகவும் சமர்ப்பிக்கலாம். வங்கியில் சமர்ப்பித்தால் உரியஆவணம் கிடைக்கும். அதாவது படிவம் சமர்ப்பித்தலுக்கானஆவணம் வழங்கப்படும்.

ஆதார் எண் இல்லாவிட்டால்... படிவத்தில் இடம் பெற்றிருக்கும் பகுதிஏ, பகுதி சி-ஐ பூர்த்தி செய்து எரிவாயு விநியோகஸ்தரிடமோ அல்லதுவங்கியிலோ சமர்ப்பிக்கலாம்.

மானியம் பெற விரும்பாவிட்டால்... படிவத்தில் பகுதி ஏ-ஐ மட்டும்பூர்த்தி செய்து, எரிவாயு விநியோகஸ்தரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

முன்பு இருந்தது போல பல்வேறு விண்ணப்பங்களை நுகர்வோர்பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. அனைத்துக்கும் ஒரேவிண்ணப்பத்தைப் பயன்படுத்தி, நேரடி மானியத் திட்டத்தில்நுகர்வோர் இணையலாம்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி