'என்' கார்டு விண்ணப்பம் அரசு இணையத்தில் வெளியீடு

'என் கார்டு' வைத்துள்ளவர், இணையதளம் மூலம், அவற்றின் செல்லத்தக்க காலத்தை நீட்டித்து கொள்ளலாம்' என, அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில், 1.98 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன.

இதில், 'என்' கார்டு எனப்படும், எந்த பொருளும் வாங்காத பிரிவின் கீழ், 64 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ளன.தற்போது, அரிசி, சர்க்கரை விருப்ப, ரேஷன் கார்டில், உள்தாள் ஒட்டப்பட்டு, செல்லத்தக்க காலம், 2015, டிச., வரை, நீட்டிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. உள்தாள் ஒட்டும் பணி, வரும், 15ம் தேதி முதல் துவங்குகிறது.இந்நிலையில், 'என்' கார்டு வைத்துள்ளவர்கள், இணையதளம் மூலம் புதுப்பிக்கும் வகையில், அதற்கான முகவரி, தமிழக அரசின், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:'என்' கார்டு வைத்துள்ளவர்கள், பிரத்யேக இணையதளத்திற்கு சென்று, அதில், ரேஷன் கார்டில் உள்ள, எண்ணை பதிவு செய்தால், ஒரு ரசீது கிடைக்கும். அதை, 'பிரின்ட்' எடுத்து, ரேஷன் கார்டில் இணைத்து கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.நமது நிருபர்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி