உயர்கல்வி உதவித்தொகைகளை உயர்த்திய மத்திய அரசு!

புதுடில்லி: ஆராய்ச்சி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் பொருட்டு, உதவித்தொகைகளுக்கான அடிப்படை நிதியளவை, பல்கலைக்கழக மானியக்குழு அதிகரித்துள்ளது.

இதன்படி, JRF எனப்படும் Junior Research Fellowship திட்டத்தின்கீழ்வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை, ரூ.16 ஆயிரத்திலிருந்து,ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல், SRF எனப்படும் Senior Research Fellowship என்றதிட்டத்தின்கீழ் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையின் அளவுரூ.18 ஆயிரத்திலிருந்து, ரூ.28 ஆயிரம் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது

இதுகுறித்து ராஜ்யசாபாவில் பேசிய மத்திய மனிதவள அமைச்சர் ஸ்மிருதி இரானி, "அடிப்படை அறிவியல் துறைகளில், JRF மற்றும் SRF ஆகியவற்றில் உயர்த்தப்பட்டுள்ள தொகையானது, அறிவியல்மற்றும் தொழில்நுட்பத் துறையில் வழங்கப்படும் உதவித்தொகைக்கு நிகரானதாக இருக்கும்" என்றார்.
மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறையில்,உதவித் தொகைகளின் உயர்வு, 55% என்பதாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக அறிவியல் துறையில் ஆய்வு மேற்கொள்வதற்கான சுவாமி விவேகானந்தா ஒற்றை பெண் குழந்தை பெல்லோஷிப் திட்டத்தில் வழங்கப்படும் உதவித்தொகை, முதல் 2 ஆண்டுகளுக்கு, மாதம் ரூ.8ஆயிரத்திலிருந்து ரூ.12,400 என்பதாகவும், அடுத்த 2 ஆண்டுகளுக்குமாதம் ரூ.10 ஆயிரத்திலிருந்து, ரூ.15,500 என்பதாகவும்உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், GATE தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படும்மாத உதவித்தொகையும் ரூ.8 ஆயிரத்திலிருந்து ரூ.12,400 ஆகஉயர்த்தப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி