டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 7

பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள்
151. இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகங்கள் எத்தனை?
152. கடல்களின் எஜமானி என அழைக்கப்படும் நாடு எது?
153. விளையாட்டுத்துறை பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது எது?
154. வாட்ஸ்அப் (Whatsapp) அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?
155. 2014-ல் பிரேசில் நாட்டில் நடைபெற்றது எத்தனையாவது உலக கால்பந்து போட்டி?
156. உலக கால்பந்து கோப்பையை ஜெர்மனி எத்தனை முறை வென்றுள்ளது?
157. 20-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2014-ல் நடந்த நாடு எது?
158. இந்தியாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகம் எது?
159. இந்தியாவில் உள்ள அஞ்சல் நிலையங்களின் எண்ணிக்கை எத்தனை?
160. இந்தியாவில் எத்தனை பஞ்சாயத்துகள் உள்ளன?
161. இந்திய ரயில்வேயின் போக்குவரத்து மண்டலங்கள் எத்தனை?
162. மலையாளிகள் என்ற பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாவட்டம் எது?
163. தமிழ்நாட்டில் காப்பி ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
164. நிலவொளி பூமியை வந்தடைய ஆகும் காலம் எவ்வளவு?
165. சோழர்களின் ஆட்சிக்காலத்தில் மெய்க்கீர்த்திகள் எனப்பட்டவை எவை?
166. செபி (SEBI) எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
167. ஐ.நா.சபையின் முதல் பொதுச்செயலாளர் யார்?
168. சியா கண்டத்தில் பெண்களுக்கு முதலில் ஓட்டுரிமை வழங்கிய நாடு எது?
169. நைல் நதி எந்த கடலில் கலக்கிறது?
170. காவல்துறையில் முதன்முதலில் பெண்களைச் சேர்த்த நாடு எது?
171. உலக உணவு நாள் கொண்டாடப்படும் தினம் எது?
172. உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுவது எந்த நாளில்?
173. மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடு எது?
174. பிளாஸ்டிக்கில் ரூபாய் நோட்டு அச்சடித்த முதல் ஐரோப்பிய நாடு எது?
175. உலகின் மிகப்பெரிய சிறைச்சாலை எங்குள்ளது?
176. ஆசியாவிலேயே மிகப்பெரிய காற்றாலை அமைந்துள்ள இடம் எது?
177. உலகில் உள்ள ஒரே ஒரு இந்து நாடு எது?
178. உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடு எது?
179. உலக தூய்மை தினம் என்று கொண்டாடப்படுகிறது?
180. உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடி கொண்ட நாடு எது?
181. தமிழ்நாட்டில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் அமைந்துள்ள இடங்கள் எவை?
182. பார்வை இல்லாதவர்களுக்கான எழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார்?
183. ஜனாதிபதி பரிசு பெற்ற முதல் தமிழ் படம் எது?
184. ஆசிய வளர்ச்சி வங்கி அமைந்துள்ள இடம் எது?
185. உலகில் ரப்பர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
186. சென்னை உயர்நீதிமன்றம் நிறுவப்பட்ட நாள் எது?
187. மதுரையில் சென்னை உயர்நீதிமன்றக் கிளை எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
188. சர்வ சிக்சா அபியான் (அனைவருக்கும் கல்வி திட்டம்) என்பது என்ன?
189. கிராமப்புற தபால் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட கமிட்டி எது?
190. "The Audacity of Hope" என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
விடைகள்
151. 38
152. இங்கிலாந்து
153. துரோணாச்சாரியார்
154. 2009 (தலைமையகம் கலிபோர்னியா)
155. 20-வது
156. 4 முறை (1954, 1974, 1990, 2014)
157. ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகர்
158. கல்கத்தா பல்கலைக்கழகம்
159. 1 லட்சத்து 55 ஆயிரம்
160. 2.4 லட்சம்
161. 17
162. நாமக்கல்
163. ஏற்காடு
164. 1.3 வினாடி
165. அரசின் சாதனை வரலாறு
166. 1988
167. டிரைக்வே (நார்வே நாட்டைச் சேர்ந்தவர்)
168. தாய்லாந்து
169. மத்திய தரைக்கடல்
170. பிரிட்டன்
171. அக்டோபர் 16
172. மார்ச் 22
173. தென்னாப்பிரிக்கா
174. ருமேனியா
175. ரஷ்யாவில் உள்ள கார்கோல்
176. முப்பந்தல்
177. நேபாளம்
178. இந்தோனேசியா
179. செப்டம்பர் 19
180. டென்மார்க்
181. மீஞ்சூர், நெம்மேலி
182. லூயி பிரெய்லி
183. மலைக்கள்ளன்
184. மணிலா
185. மலேசியா
186. 26.6.1862
187. 2004
188. 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் 8-ம் வகுப்பு வரை கல்வி அளிக்கும் திட்டம்
189. கோபிநாத் கமிட்டி
190. அமெரிக்க அதிபர் ஒபாமா.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி