புத்தகத்துக்கு குட்பை - கணினி மூலம் மாணவர்களுக்கு கல்வி புதிய திட்டம் துவக்கம்!

கர்நாடக மாநில அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புத்தகம் இல்லாமல் கணினி மூலம் பாடம்நடத்தும் புதிய திட்டத்தை கல்வி இயக்குனரகம் மேற்கொண்டுள்ளது.

பொதுவாக அரசு பள்ளிகளில் தரமான கல்வி கிடைப்பதில்லைஎன்பதால், வசதிப்படைத்தவர்கள் தொடங்கி கூலி வேலைசெய்வோர் வரை தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்கவைக்கிறார்கள்.

நகரபுறங்களில் மட்டுமே இருந்த இக்கலாச்சாரம், தற்போது ஊரகபகுதியிலும் வேரூன்றி உள்ளது. அரசு பள்ளிகளுக்கு மாணவர்சேர்க்கை குறைவாக இருப்பதால், நடப்பு கல்வியாண்டில் 3ஆயிரத்து 173 கன்னட பள்ளிகளை மூடிவிட அரசு முடிவு செய்தது.இதற்கு பல தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, பள்ளிகளை மூடும் முடிவு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குஇணையாக அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் தரமானகல்வி வழங்கும் நோக்கத்தில் 'புத்தகம் இல்லாமல் கல்வி' என்றபெயரில் தேசிய எழுத்தறிவு இயக்கம் மற்றும் கர்நாடக கல்விஇயக்குனரகம் இணைந்து செயல்படுத்த முடிவு செய்தது. அதன்படிமைசூரு மாவட்டம், உன்சூர் தாலுகா, மூதூர் கிராமத்தில் உள்ளஅரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாகமடிகணினி வழங்கப்பட்டுள்ளது.

அதை நாற்காலி மீது வைத்து ஆசிரியர் பாடம் நடத்தும்போது, மாணவர்கள் பார்த்து தெரிந்துகொள்கிறார்கள். மூதூர் கிராமத்தில்தொடங்கியுள்ள இத்திட்டத்தை விரைவில் சில கிராமங்களில் செயல்படுத்த கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. இதைதொடர்ந்து தற்போது 'கணினி பாடம்' என்ற பெயரில் புதிய பாடதிட்டத்தை பெலகாவி மாவட்டத்தில் கல்வி இயக்குனரகம் தொடங்கியுள்ளது.
மாவட்டத்தில் உள்ள வடகாவி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைபள்ளியில் இத்திட்டத்திற்காக டிஜி ஸ்கூல் கம்ப்யூட்டர் சர்வர் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் இரண்டாமாண்டு பி.யு.சி. வரையிலான பாடங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
பள்ளி அறையில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் திரையில் டி.வி.டி.மூலம் பாடம் ஒளிபரப்பு செய்யப்படும். ஓவியங்களுடன் இருக்கும் பாடத்தை ஆசிரியர் விளக்கினால், மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் செயல்படுத்துவதின் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய வழியில் கல்வி கற்பிப்பதுடன்,ஆசிரியர்களின் சுமையும் குறைகிறது. மேலும் பாடத்தில் எத்தனைமுறை சந்தேகம் வந்தாலும், அதை அடிக்கடி டி.வி.டி. மூலம்போட்டு தெரிந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும். எதிர்க்காலத்தில்டி.வி.டியை தனிதனியாக மாணவர்களுக்கு வழங்கும்யோசனையும் கல்வி இயக்குனரகத்திற்கு இருப்பதாகதெரியவருகிறது.
முதல் கட்டமாக பெலகாவியில் தொடங்கியுள்ள கணினி பாடதிட்டம் படிப்படியாக அனைத்து மாவட்டங்களுக்கும்விரிவுபடுத்தும் ஏற்பாடு நடந்து வருகிறது. உலகில் 18 நாடுகளில்இக்கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய கல்விஉலகில் கணினி உதவியுடன் கல்வி வழங்குவது அவசியமானஒன்று என்பது கல்வியாளர்களின் கருத்தாகவுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி