பொது அறிவை வளர்த்துக் கொள்வது எப்படி?

நெல்லை எம்.சண்முகசுந்தரம், வேலைவாய்ப்பு அலுவலர் (ஓய்வு)

போட்டித்தேர்வுக்கு தயார் செய்யும் மாணவ-மாணவிகள் தினசரி செய்தித்தாள்களையும், பொது அறிவு தொடர்பான மாத இதழ்களையும் தவறாமல் படித்து வரவேண்டும்.

தினசரி செய்தித்தாள்களில் உலக அளவிலும், தேசிய அளவிலும் மாநிலம் மற்றும் மண்டல அளவில் நிகழ்கின்ற நடப்பு செய்திகள், நாடு களுக்கு இடையேயான உடன் படிக்கைகள், மாநாடுகள், இந்தியஅளவில் நடைபெறும் நிகழ்ச்சிகள், புதிய கண்டு பிடிப்புகள், புதிய நியமனங்கள், இயற்கைச் சீற்றங்கள், புதிதாக வெளியிடப்படும் புத்தகங்கள், அவற்றின் ஆசிரியர்கள், கலை பண்பாடு பற்றிய செய்திகள், தேசிய, சர்வதேச அளவில் வழங் கப்படும் பரிசுகள், விளையாட்டுச் செய்திகள், பொருளாதாரம் தொடர் பான செய்திகள் வெளியிடப்படும். போட்டித்தேர்வெழுதுவோர் செய்தித்தாள்களைப் படித்து, குறிப் பெடுக்க ஒரு மணி நேரம் செலவிட வேண்டும். செய்தித்தாளை இரண்டுமுறை படிக்க வேண்டும்.

முதல் முதலாக பொது அறிவு தொடர்பான செய்திகளை மட்டும் வாசிக்க வேண்டும். தேர்வுக்கு எவையெல்லாம் தேவைப்படும் என்பதை தீர்மானித்து அவற்றை மட்டும் குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டும். முக்கியமான தலையங்க பகுதிகளை (Editorial Page) அதை வெட்டி குறிப்பேட்டில் ஒட்டிவைத்துப் படிக்க வேண்டும்.

இரண்டாவது முறையாக செய்தித் தாள்களைப் படிக்கும் போது, அதில் பிரசுரமாகியுள்ள அரசு மற்றும் தனியார் துறை விளம்பரங்களைப் படிக்க வேண்டும். அரசுத்துறை விளம்பரங்கள் மூலம் நம் நாட்டில் என்னென்ன துறைகள் செயல்பட்டு வருகின்றன என்பதை அறியலாம். தனியார் விளம்பரங்கள் மூலம் என்னென்ன பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன என் பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

மேற்கண்டவாறு செய்தித்தாள் களைப் படித்து குறிப்பெடுக்கும் வழக்கத்தை மேற்கொண்டு வந்தால் எந்தப் போட்டித்தேர்வையும் சந்திக்க முடியும் என்ற தன்னம் பிக்கை வரும். தேர்வில் இந்த கேள்விகள்தான் வரும் என உறுதியாக கூற முடியாது. இந்த கேள்விகளை எல்லாம் கேட்க வாய்ப்பு உள்ளது என அனுமானத் தில் நாம் தேர்வுக்கு தயார்செய்ய வேண்டும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி