வாட்ஸ்ஆப் நிறுவனம் தங்களது சேவையை பயன்படுத்த இந்தியர்களுக்கு மட்டும் ஆண்டு சந்தா இல்லை

வாட்ஸ்ஆப் நிறுவனம் தங்களது சேவையை பயன்படுத்த இந்தியர்களுக்கு மட்டும் ஆண்டு சந்தா இல்லை என்று அறிவித்துள்ளது. செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பிய காலம் மெதுவாக மலையேறிக் கொண்டிருக்கிறது. எதற்கு காசு கொடுத்து எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும் எடுடா போனை அடிடா மெசேஜை அனுப்புடா வாட்ஸ்ஆப்பில் என்று இருக்கும் காலம் இது. வாட்ஸ்ஆப்பில் இலவசமாக மெசேஜ் அனுப்ப முடியும் என்பதால் அது பலருக்கும் பிடித்துள்ளது. வாட்ஸ்ஆப் சேவையை பயன்படுத்த ஆண்டு சந்தாவாக ரூ.61 செலுத்த வேண்டும். ஆனால் இந்தியர்களுக்கு மட்டும் ஆண்டு சந்தா எதுவும் கிடையாது என்று வாட்ஸ்ஆப் அறிவித்துள்ளது. ஆயுள்காலத்திற்கும் சந்தா இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வாட்ஸ்ஆப் துணை தலைவர் நீரஜ் அரோரா கூறுகையில், இந்தியாவில் கிரெட்டி கார்டுகள் அதிகம் பயன்படுத்துவது இல்லை என்பதை எங்கள் நிறுவனம் புரிந்து கொண்டுள்ளது. ஒரு சேவைக்காக பணம் செலுத்துவது பலருக்கும் ஆப்ஷன் இல்லை. சேவையை புதுப்பிக்க நிறுவனம் ஆண்டுதோறும் ரூ.61 வசூலிக்கும். ஆனால் இந்தியர்களுக்காக சேவை இலவசம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது என்றார். இந்தியாவில் மட்டும் 7 கோடி பேர் வாட்ஸ்ஆப் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்-இன் புதிய அறிமுகம்!

குறுந்தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ கோப்புக்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வசதியை தரும் வாட்ஸ்அப் (WhatsApp). ஆனது தற்போது மற்றுமொரு புதிய வசதியினை அறிமுகம் செய்துள்ளது. குறுந்தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ கோப்புக்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வசதியை தரும் வாட்ஸ்அப் (WhatsApp). ஆனது தற்போது மற்றுமொரு புதிய வசதியினை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, நண்பர்களுக்காக அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியினை அவர்கள் படித்துவிட்டார்களா? எப்போது படித்தார்கள் என்பது தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ளும் வசதியே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியானது இந்தியா உட்பட அனைத்து நாடுகளில் உள்ள ஆண்ட்ராய்டு மற்றும் ஐ போன் பயன்படுத்துபவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்- ஐ பொறுத்தவரை, இந்த வசதி ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு வின்டோஸ், பிளாக்பெரி, பிளாக்பெரி 10 மற்றும் சிம்பெய்ன் போன்களுக்கு பொருந்தும். இதன்படி ஸ்மார்ட் போன் அல்லது டேப்லட்டிலுள்ள வாட்ஸ் அப் அப்பிளிக்கேஷனில் நீல நிறத்திலான இரு சரி அடையாளங்கள் (Double tick) காணப்படுமாயின் உங்களால் அனுப்பப்பட்ட செய்தியினை உங்கள் நண்பர் படித்து விட்டார் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. அத்துடன் பார்வையிட்ட நேரத்தையும் காட்டுகிறது. எனினும் குழு சாட்டிங்கின்போது (Group Chat) சரி அடையாளங்கள் மட்டும் நீல நிறமாக மாறும். குழு சாட்டிங்கில் நாம் அனுப்பிய செய்தியினை அழுத்தி பிடித்தால் அதாவது லாங் பிரஸ் செய்தால் குழுவில் இருக்கும் நண்பர்களுள் யாருக்கு செய்தி சென்றடைந்து விட்டது, யார் அந்த செய்தியினை படித்து விட்டார்கள் என்று தெளிவாக காட்டுகிறது. முன்பு ஒரு செய்தி டெலிவரி ஆகிவிட்டால் செய்திக்கு அருகில் சாம்பல் நிற இரு சரி குறி (Double tick) வரும். ஆனால் செய்தி படிக்கப்பட்டதா இல்லையா? என்று தெரியாமலேயே இருக்கும். இப்போது வாட்ஸ்அப்-இன் புதிய அப்டேட் வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. 

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி