முதுநிலை பட்டதாரி ஆசிரியர் எழுத்துத் தேர்வு : இன்று முதல் விண்ணப்பம்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வுக்கானவிண்ணப்பங்கள் திங்கள்கிழமை (நவம்பர்10) முதல் விநியோகிக்கப்பட உள்ளன.

1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நவம்பர் 10 முதல் 26-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

சென்னையில்?..

சென்னை மாவட்டத்தில் இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் சென்னை நந்தனத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நவம்பர் 10-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை விநியோகிக்கப்படும் என சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனிதா தெரிவித்தார். விண்ணப்பத்தின் விலை ரூ.50 ஆகும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி