மின் கட்டண உயர்வு விரைவில் அமல்!

மின் கட்டண உயர்வு விரைவில் அமல்படுத்தப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து, பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் சென்னை, திருநெல்வேலி, ஈரோடு ஆகிய இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது.

இதில் பங்கேற்ற பொதுமக்கள் மின் கட்டணத்தை உயர்த்துவதுற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதையடுத்து, மக்கள் தெரிவித்த கருத்துக்கள், ஆட்சேபனைகள், ஆலோசனைகள் குறித்து மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மற்றும் மின் வாரிய அதிகாரிகள் சென்னையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். 

அப்போது மின் கட்டண உயர்வை வரும் 10ஆம் தேதி அறிவிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.உயர்த்தப்படும் மின் கட்டண பட்டியலை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்டதும் அந்த தேதியில் இருந்து இந்த மாதமே மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்து விடும்.

உத்தேச பட்டியல்

மேலும், உத்தேச விலைப்பட்டியலும் வெளியாகியுள்ளன. அதன்படி, முதல் 100 யூனிட்டுக்கு ரூ.3ம், 101 முதல் 200 யூனிட்டுக்கு ரூ.3.25ம், 201 முதல் 500 யூனிட்டுக்கு ரூ.4.60ம், 501 யூனிட்டுக்கு மேல்6.60ம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், கடைகளுக்கு 100 யூனிட்டுக்கு மேல் 8.05ம், தொழிற்சாலைகளுக்குரூ.7.22ம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி