சிலிண்டருக்கு பணம் இன்று முதல் வங்கியில்!

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியத்தை, பயனாளிகளின் வங்கிக்கணக்கிற்கே நேரடியாக செலுத்தும் திட்டம், புதுச்சேரி உட்பட, 11 மாநிலங்களில்உள்ள, 54 மாவட்டங்களில், இன்று முதல் மீண்டும் அமலாகிறது.

இதனால், பயனாளிகள் சந்தை விலைக்கே, இனி, சமையல் எரிவாயு சிலிண்டர்களை வாங்க நேரிடும். அதற்கான மானியம், அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அதாவது, சந்தை விலைக்கும், மானிய விலைக்கும் இடையேயான வேறுபாட்டுத் தொகை, வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். 

முதலில் புக்கிங் செய்யப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் டெலிவரியானதும், அடுத்த சிலிண்டருக்கான மானியம், முன்பணமாக, பயனாளிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். நேரடி மானிய திட்டத்தில் ஏற்கனவே சேர்ந்தவர்களுக்கு, அவர்களுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம், தொடர்ந்து, வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அதில், பிரச்னை எதுவும் இருக்காது.மானியத் தொகை வங்கி கணக்கில் வரவாவதில், பிரச்னை ஏதும் இருந்தால், 'www.mylpg.in' என்ற இணையதளத்தில், தங்களின் புகாரை பதிவு செய்யலாம்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி