இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு
* புவியியல் அடிப்படையில் இந்தியா தீபகற்பம் எனப்படுகிறது. காரணம் இந்தியா மூன்று பக்கம்கடலாலும், ஒரு பக்கம் நிலப்பகுதியாலும்(இமயமலை) சூழப்பட்டுள்ளது.
* புவியின் அடிப்படையில் நோக்கும்போது இந்தியாவை ஒரு கண்டமாகவே கருதலாம்.எனினும் அதன் பரப்புக்குறைவால் இதனை துணைக்கண்டம் என்பர்.
* இந்தியா பரப்பளவில் ஏழாவது மிகப்பெரிய நாடாக உலக அரங்கில் இடம் பெற்றுள்ளது.ரஷ்யா, கனடா, சீனா, அமெரிக்கா, பிரேசில், ஆஸ்திரேலியா ஆகியவற்றுக்கு அடுத்த இடத்தைப்பிடித்துள்ளது.
* புவியின் நிலப்பரப்பில் 2.4 சதவீதம் பெற்றுள்ளதுடன், 17 சதவீத மக்கள் தொகையையும்பெற்றுள்ளது. இந்தியாவைப் போல் 7 மடங்கு பெரிய நாடாக ரஷ்யா விளங்குகிறது.
* ஜப்பான் நாட்டைவிட 9 மடங்கு இந்தியா பெரியது. இங்கிலாந்தைப்போல் 13 மடங்கு பெரியநாடு இந்தியா.
* இந்தியாவின் பரப்பு பாகிஸ்தானை விட நான்கு மடங் கு அதிகம். அவ்வாறே அமெரிக்காவின்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு இந்தியா ஆகும்.
* இந்தியா புவியின் வட அரைக்கோளப் பகுதியில் அமைந்துள்ளது. அருணாச்சலப்பிரதேசத்திற்கும், குஜராத்திற்கும் இடையில் தல நேரத்தில் 2 மணி நேரம் வேறுபாடுதோன்றுமளவிற்கு இந்தியா மிகப்பெரியது.
* அருணாச்சலப்பிரதேசத்தில் சூரியன் தோன்றிய பின், சுமார் 2 மணி நேரத்திற்குப் பின்னரேகுஜராத்தில் சூரியன் தோன்றுகிறது.
* இந்தியாவிற்கும் சீனாவிற்கும் எல்லையாக இமயமலைகள் விளங்குகிறது. இவ்விருநாடுகளையும் மக்மோகன் எல்லைக்கோடு பிரிக்கிறது. இக்கோடு இமயமலைகளின் ஊடாகச்செல்கிறது.
* பாக்ஜலசந்தி இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தியாவிற்கும்பாகிஸ்தானுக்கும் எல்லையாக சிரில் ராட்கிளிஃப் எல்லைக்கோடு விளங்குகிறது.
* மேற்கில் அரபிக்கடலும், கிழக்கில் வங்காள வரிகுடாவும் உள்ளன.
* அரபிக்கடலில் கேரளாக் கடற்கரையை ஒட்டி அமைந்த இலட்சத்தீவுகள் மற்றும் கிழக்கில்வங்காள விரிகுடாவில் வடக்கு தெற்காக நீண்ட சங்கிலித் தொடராய் அமைந்துள்ள அந்தமான்நிக்கோபார் தீவுகள் ஆகியன இந்தியாவிற்குள் அடங்குகின்றன.
* இந்தியா ஆசியாக் கண்டத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது. இந்தியாவின் பரப்பளவு32,87,263 சதுர கிலோ மீட்டராகும்.
* இந்தியாவின் வடக்கு தெற்கு தூரம்3214 கிலோமீட்டர். கிழக்கு மேற்கு தூரம் 2933 கிலோமாட்டர். தீவுகளை உள்ளடக்கிய இந்தியக் கடற்கரை நீளம் 7516 கிலோ மீட்டர். (இதில் 5700கிலோ மீட்டர் நீளம் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் கடற்கரை நீளமாகும்).
* இந்தியாவின் மொத்த நிலப்பரப்பு எல்லை நீளம் 15,200 கிலோ மீட்டர் ஆகும். இந்தியா அதிகஅளவு எல்லையை வங்காள தேசத்துடன் கொண்டுள்ளது.
* இந்தியாவில் மிக நீண்ட கடற்கரையை உடைய மாநிலங்கள் 1. குஜராத் 2. ஆந்திரப்பிரதேசம்.
* இந்தியா அமைந்துள்ள அட்ச ரேகை 80 4' 28'' வடக்கு முதல் 370 17' 53'' வடக்கு வரை.
* இந்தியா அமைந்துள்ள தீர்க்க ரேகை 680 7' 53'' கிழக்கு முதல் 97024' 47'' கிழக்கு வரை.
* 230 1/2 டிகிரி கடக ரேகை இந்தியாவை இரு பிரிவாகப் பிரிக்கிறது. கடக ரேகை செல்லும்மாநிலங்கள் மிசோராம், திரிபுரா, மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம், * சத்தீஸ்கர்,ஜார்க்கண்ட், குஜராத் மற்றும் இராஜஸ்தான் ஆகியன.
* இந்தியாவின் திட்ட நேரம் கிழக்கு தீர்க்க ரேகை 82 1/20 ஆகும். கிரீன் வீச் நேரத்திலிருந்துஐந்தரை மணி நேரம் வேறுபடுகிறது.
* இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 43.3 சதவீதம் சமவெளிகளும், 10.7 சதவீதம் மலைகளும், 18.6 சதவீதம் குன்றுகளும், 27.7 சதவீதம் பீடபூமிகளும் உள்ளன.
* இந்தியாவின் தென்கோடியில் கன்னியாகுமரி உள்ளது. இந்தியாவின் தென்கிழக்கே இந்திராமுனை உள்ளது.
* இந்தியா வட அரைகோளப் பகுதியின் கிழக்குப் பகுதியல் உள்ளது.
* இந்தியாவின் நுழைவாயில் எனப்படுவது மும்பை ஆகும். கடகரேகை இந்தியாவை தீபகற்பஇந்தியா, புறதீபகற்ப இந்தியா என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கிறது.
* வேற்றுமைகளில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் தனிச்சிறப்பு ஆகும். எனவே தான்வேற்றுமையிலுள்ளும் ஒற்றுமை என்று பண்டித ஜவகர்லால் நேருவின் கூற்றிற்கு இந்தியாஇலக்கணமாக அமைந்துள்ளது.
இந்தியா - இயற்கையமைப்பு
* சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன் புவி தோன்றியது. சுமார் 7 கோடி ஆண்டுகளுக்கு முன்புவியியல் மாறுபாடுகளின் விளைவாக டெர்ஷியரி கால டெத்திஸ் என்ற மிகப்பெரிய கடல்பகுதியிலிருந்து மேலெழுந்து இமயமலைகள் தோன்றின.
* புவியியல் கொள்கையின்படி, துவக்க காலத்தில் பூமியின் நிலப்பரப்பு அனைத்தும் ஒரேநிலப்பகுதியாக இருந்ததென்று கருதப்படுகிறது. ஒரே தொகுப்பான அப்பகுதி பேஞ்சியா என்றுஅழைக்கப்பட்டது. அதைச்சுற்றி பேன்தலாசா என்ற நீர்ப்பரப்பும் காணப்பட்டது.
* பேஞ்சியா நிலப்பகுதி டெத்திஸ் என்ற தாழ்வான இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.அதன்பிறகு காலப் போக்கில், அந்த ஒன்றை நிலப்பகுதி சிறிது சிறிதாக இரண்டு பெரியநிலப்பரப்புகளாக உடைந்தன.
* வடக்கில் உடைந்த பகுதி அங்காரா நிலப்பகுதி என்றும், தெற்கில் உடைந்த பகுதிகோண்ட்வானா நிலப்பகுதி என்றும் அழைக்கப்பட்டது.
* அவ்வாறு தெற்கில் உடைந்த கோண்ட்வானா நிலப்பகுதியில் இருந்து காலப்போக்கில் சிறிதுசிறிதாகப் பிரிந்து வந்ததே இந்தியத் துணைக்கண்டமாகும்.
* நிலத்தோற்றம், நில உள்ளமைப்பு, வடிகாலமைப்பு, காலநிலை, இயற்கைத்தாவரம் மற்றும்மண் ஆகிய இயற்கைக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்படும் வட்டாரம் இயற்கைவட்டாரம் எனப்படும்.
* ஒருமித்த புவியியல் கூறுகளை உள்ளக்கிய ஓர் நிலப்பகுதி வட்டாரம் எனப்படுகிறது.
* இந்தியாவின் இயற்கையமைப்பை 3 பெரும்பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவையாவன 1.வடக்கிலுள்ள இமயமலைத் தொடர்கள் 2. வடக்கிலுள்ள சமவெளிப்பகுதிகள் 3.தீபகற்ப பீடபூமிப்பகுதி ஆகியன.
வடக்கிலுள்ள இமயமலைத் தொடர்கள்
* காஷ்மீர் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரை கிழக்கு மேற்காக சுமார் 2500 கிமீ நீளம் வரைஇமயமலைகள் சங்கிலித் தொடர் போன்று பரவியுள்ளது.
* அத்துடன் இவை சுமார் 150 முதல் 400 கிமீ அகலம் வரை உள்ளது. மேற்கில் சுமார் 400 கிமீஅகலத்துடனும், கிழக்கில் சமார் 150 கிமீ அகலத்துடனும் காணப்படுகிறது.
* இமயமலைகள் இந்தியாவிற்கு வடக்கில் ஓர் இயற்கை அரணாக அமைந்துள்ளது. இளம்மடிப்பு மலைகளால் (Young Fold Mountains) ஆனதே இமயமலைகள் ஆகும்.
* இமயமலை மத்திய ஆசியாவின் பாமீர் முடிச்சில் இருந்து, (பாமீர் முடிச்சு உலகின் கூரைஎன்று குறிப்பிடப்படுகிறது) தொடங்குகிறது.
* இந்த இமயமலைத் தொகுப்பை நாம் மூன்று உட்பிரிவுகளாகக் காண்போம்.
அவையான
அ)பெரும் இமாலயத் தொடர் (Greater Himalayas)
ஆ.மத்திய இமாலயத் தொடர் (Middle Himalayas)
இ.புற இமாலயத் தொடர் (Outer Himalayas)
பெரும் இமயமலைத் தொடர்கள்
* உலகின் உயர்ந்த மலைத்தொடர்கள் இங்குதான் உள்ளன. இவற்றிற்கு ஹிமாத்ரி தொடர்என்றும் வேறு பெயர் உண்டு காரகோரம், லடாக், கைலாயம், ஜாஸ்கர் போன்றமலைத்தொடர்கள் இதில் உள்ளன.
* காரகோரம் மலைத்தொடரில் தான் காட்வின் ஆஸ்டின் அல்லது K2 என்ற உலகின் இரண்டாவதுமிக உயர்ந்த சிகரம் அமைந்துள்ளது. இதன் உயரம் 8611 மீட்டர் ஆகும்.
* K2 என்பது தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியில் உள்ளது. கைபர் மற்றும் போலன்கணவாய்களும் தற்போது பாகிஸ்தானில் தான் உள்ளன.
* இவை தவிர பால்ட்ரோ பனியாறு, சியாச்சின் பனியாறு போன்றவைகளாலும் இத்தொடர் புகழ்பெறுகிறது.
* மக்காலு, தவளகிரி, நங்க பர்வதம், நந்தா தேவி போன்ற பிற சிகரங்களும் இத்தொடரில் தான்அமைந்துள்ளன. மேலும் இத்தொடரில் சில முக்கியக் கணவாய்கள் உள்ளன.
* காஷ்மீரிலுள்ள காரகோரம், கணவாய், இமாச்சலப் பிரதேசத்திலுள்ள ஷிப்கிலா கணவாய்,சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாதுலா கணவாய், அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள பொம்டிலாகணவாய் ஆகிய குறிப்பிடத்தக்கவை.
* பெரும் இமாலயத் தொடர்கள் பெரும்பாலும் பனியால் மூடப்பட்டிருக்கும். ஹிமம் என்றால்பனி என்று பொருள், ஹிமாலயா என்றால் பனியின் இருப்பிடம் என்று பொருள்.
* வடக்குப் பகுதியில் இத்தொடர்களில்தான் உலகின் மிக உயர்ந்த சிகரமான மவுண்ட் எவரெஸ்ட்(8848 மீ) அமைந்தள்ளது. இது நேபாளத்தில் அமைந்துள்ளது. இதற்கு சாகர் மாதா என்றும் பெயர்வவங்கப்படும்.
* அத்துடன் கஞ்சன் ஜங்கா மலைத்தொடரில், 8598 மீ உயரமுடைய, இந்தியாவின் மிக உயர்ந்தசிகரமான கஞ்சன் ஜங்கா சிகரம் விளங்குகிறது. இது சிக்கிம் மாநிலத்தில் உள்ளது.
மத்திய இமயமலைத் தொடர்கள்
* ஹிமாச்சல் தொடர்கள் என்றும் இதற்கு வேறுபெயர் உண்டு. சுமார் 3000 முதல் 4500 மீட்டர்உயரமுடையவை.ஹிமாத்ரி தொடருக்குத் தெற்கே அமைந்துள்ளது.
* பீர் பாஞ்சால், குமாயுன், மகாபாரத், திம்பு ஆகிய மலைத்தொடர்கள் இதில் அமைந்துள்ளன.இவற்றில் பீர் பாஞ்சால் தொடர் காஷ்மீரிலும், தவுளதார்தொடர் ஜம்மு-காஷ்மீரிலும், மகாபாரத்தொடர் ஜம்மு-காஷ்மீரிலும், மகாபாரத்தொடர்கள் நேபாளத்திலும் அமைந்துள்ளன.
* புகழ்பெற்ற பீர்பாஞ்சால் மற்றும் காஷ்மீர் பள்ளதாக்கு இத்தொடரில் உள்ளன. இதில் அதிக உயரத்தில் உள்ள கோடை வாசஸ்தலம் குல்மார்க் ஆகும்.
* மேலும் டல்ஹெளசி (இமாச்சலப் பிரதேசம்), தர்மசாலா, சிம்லா (இமாச்சலப் பிரதேசம்),முசெளரி (உத்திரப் பிரதேசம்), நைனிடால் (உத்திராஞ்சல்), டார்ஜிலிங் (மேற்கு வங்காளம்)ஆகிய கோடை வாசஸ்தலங்கள் அமைந்துள்ளன.
புற இமயமலைத் தொடர்கள்
* இமயமலைகளின் தெற்குமுனைப்பகுதி இது. சிவாலிக் கொடர்கள் என்றும்அழைக்கப்படுகிறது. சராசரியாக 1000 மீ உயரமுடையது. தராய் காடுகள் இங்கு காணப்படுகிறது.
* இத்தொடர் தொடர்சிசியற்றுக் காணப்படுகிறது. இத்தொடருக்கும், மத்திய இமாலயத்தொடருக்கும் இடையில் பல பள்ளத்தாக்குகள் உள்ளன. அவை டூன்கள்என்றழைக்கப்படுகின்றன.
* டேராடூன் அத்தகைய பள்ளத்தாக்கே ஆகும். இத்தொடரின் கிழக்குப் பகுதியில் பூர்வாஞ்சல்குன்றுகள் உள்ளன. மேலும் இத்தொடரில் தான் காசி குன்றுகள், காரோ குன்றுகள், ஜெயந்தியாகுன்றுகள் ஆகியன மேகாலயாவில் அமைந்துள்ளன. இத்தொடரில் பெருமளவு மண்ணரிப்புநடைபெறுகிறது.
* மேற்காணும் பிரிவுகள் போலவே இமயமலைகளை திசைகளை அடிப்படையாகக் கொண்டும்பிரிப்பர்.
* ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாலங்களிலுள்ள இமயமலைகள் மேற்குஇமயமலைகள் என்றும், உத்திரப்பிரதேசம், நேபாளம் ஆகிய இடங்களிலுள்ளவை * மத்தியஇமயமலைகள் என்றும், மேற்கு வங்காளம், சிக்கிம், பூடான், அருணாச்சலப் பிரதேசம் ஆகியஇடங்களில் உள்ள இமயமலைகள் கிழக்கு இமயமலைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
* குமாயுன் பள்ளத்தாக்கு உத்திரப்பிரதேசத்திலும், காஷ்மீர் பள்ளத்தாக்கு (பூமியின் சொர்க்கம்)ஜம்மு-காஷ்மீரிலும் அமைந்துள்ளன.
தீபகற்ப இந்திய மலைத்தொடர்கள்
* தீபகற்ப இந்தியாவில் மூன்று மலைத்தொடர்கள் உள்ளன. 1.விந்திய-சாத்பூரா மலைகள் 2.மேற்குத்தொடர்ச்சி மலைகள் 3. கிழக்குக்குன்றுகள் ஆகியன. இவற்றில் விந்திய சாத்பூராமலைகள் ந்ரமதை நதி பள்ளத்தாக்கிற்கு இணையாக மேற்கு-கிழக்கான செல்லுகின்றன. இவைஉண்மையில் நர்மதா பள்ளத்தாக்கின் பக்கச்சுவர்களே உண்மையில் மலைகளே அல்ல.இம்மலைகள் வாரணாசிக்கு அருகில் முடிவடைகின்றன.
* சாத்பூரா மலைகள் நர்மதைக்கும் தபதிக்கும் இடையே காணப்படுகின்றன. இம்மலைகளின்பாறைகள் தக்காண, லாலா பீடமூபூமி பாறை வகைகளைச் சார்ந்தவை. இவை வரலாற்றுகாலத்தில் ஏற்பட்ட மடிப்பு மவைகள் ஆகும்.
* சாத்பூரா என்றால் ஏழு மடிப்புகள் என்று பொருள்படும் சாத்பூரா மலைகள் மிகப் பழமையானமடிப்பு மலைகள்.
* இவ்வாறே தீபகற்ப இந்தியாவின் மேற்கில் மேற்கு கடற்கரைக்கு இணையாக மேற்குத்தொடர்ச்சி மலைகள் அமைந்துள்ளன. தபதி நதியின் முகத்துவாரத்திலிருந்து கன்னியாகுமரிவரை வடக்கு தெற்காவும் அமைந்துள்ளன.
* இத்தொடரில் மூன்று கணவாய்களும் உள்ளன. வடக்கில் தால்காட் போர்காட் கணவாய்களும்,தெற்கில் பாலக்காட்டுக் கணவாயும் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் தென்பகுதியில்உயரமான சிகரங்கள் உள்ளன.
* குறிப்பாக, நீலகிரி மலைகள் தொட்டபெட்டாவும், ஆனைமலையில் ஆனைமுடியும்குறிப்பிடத்தக்கவை. பழனிமலை, கொடைக்கானல் மலை, குற்றால மலை ஆகியனவும்மேற்குத் தொடர்ச்சி மலைகளைச் சார்ந்தவை.
* கோடை வாழிடங்களான உதகமண்டலம், குன்னூர், கோத்தகிரி, ஆகியனவும் இம்மலைத்தொடரில் உள்ளன.
* கிழக்குக் குன்றுகள் கிழக்குக் கடற்கரைச் சமவெளியை ஒட்டி அமைந்துள்ளன. தொடர்ச்சியற்றபல குன்றுகளாகவும் உள்ளன. ஒரிசா மாநிலத்திலிருந்து ஆந்திர மாநிலம் வரை கிழக்குக்கடற்கரையை ஒட்டிச் செல்கின்றன.
* பின்னர் தென்மேற்காகச் சென்று நீலகரியில் மேற்குத் தொடர்ச்சி மலைகளுடன்இணைகின்றன. இதில் திருப்பதி மலை, ஜவ்வாது மலை, கொல்லி மலை, பச்சைமலைஆகியவை முக்கியமானவை. ஏற்காடு, ஏலகிரி ஆகியவை இம்மலைகளில் முக்கிய சுற்றுலாத்தலங்கள்.
வடக்கில் உள்ள சமவெளிப் பகுதிகள்
* இமயமலைகளின் அடிப்பகுதியிலிருந்து தீபகற்ப இந்தியாவின் வடபகுதி வரை சுமார் 7.5இலட்சம் சதுர கிலோ மீட்டர் வரை சமவெளிகள் பரந்துள்ளன.
* பஞ்சாப் சமவெளி முதல் அல்லாம் பள்ளத்தாக்கு வரையில் இச்சமவெளி பரவியுள்ளது. சுமார்3200 கிமீ நீளமும், 150 முதல் 300 கிமீ வரை அகலும் உடையது. வண்டல் படிவுகளால் ஆனது.
* இமயமலையிலிருந்து தோன்றும் ஆறுகளால் இப்பகுதி வளப்படுத்தப்படுகிறது.இச்சமவெளியின் உயர்நிலப் பகுதி பாங்கர் மண்ணால் ஆன வளம் மிக்க பகுதியாகும்.
* மேலும் இச்சமவெளியின் தாழ்நிலப்பகுதி காதர் மண்ணால் ஆனது.
* ஆற்றுப் பள்ளத்தாக்குகளுக்கு இடைப்பட்ட, தோவாப் பகுதிகளில் உயரமான இடங்களில்பழமையான படிவு மண் காணப்படுகிறது. இதுவே பாங்கர் ஆகும்.
* எனினும் பாங்கர் நிலப்பகுதிகளில், சமச்சீரற்ற சுண்ணாம்புப்படிவுகள் உள்ளன. இவை கான்கர்எனப்படும்.
* பாங்கர் பகுதிகளைப் பொறுத்த வரை, உயரமான உடங்களில் அமைந்துள்ளதால்,வெள்ளத்தினால் அரிக்கப்படாமல் உள்ளது.
* ஆற்றுப்பள்ளத்தாக்குளின் தாழ்நிலப்பகுதிகளில் உள்ள மண் காதர் ஆகும்.உத்திரப்பிரதேசத்தில் இம்மண் காதர் என்றும் பஞ்சாப் பகுதியில் இம்மண் பெட் என்றும்வழங்கப்படுகிறது.
* இம்மண் உள்ள இடங்கள் தாழ்நிலங்களாக உள்ளமையால், வெள்ளத்தினால் அரிப்புக்குஉட்படுகிறது.