தகவல் தொடர்புக்கு ஃபேஸ்புக், கூகுள் பிளஸ் போன்ற சமூக தளங்களை விட வாட்ஸப், வி சாட் போன்ற வசதிகளை பயன்படுத்துவது மக்களிடையே அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் குளோபல் வெப் இண்டெக்ஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. ஃபேஸ்புக் சமூக தளத்தை பயன்படுத்தி சலிப்பு ஏற்பட்டு விட்டதாக கூறுவோர் எண்ணிக்கை முன் எப்போதையும் விட அதிகரித்துவிட்டதாகவும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
அதே சமயம் வாட்ஸப் போன்ற மொபைல் மெசேஜிங் அப்ளிகேஷன்கள் மூலம் தகவல் தொடர்பு எளிதாகவும் விரைவாகவும் இருப்பதாகவும் பலரும் இதை பயன்படுத்துவதால் தாங்களும் இதற்கு மாறியதாகவும் இந்த ஆய்வில் பங்கேற்றோர் தெரிவித்துள்ளனர். ஆசிய அளவில் வி சாட்பிரபலமாக இருந்தாலும் இந்தியாவில் வாட்ஸப் பிரபலமாக இருப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.