கரக்பூர் ஐ.ஐ.டி மாணவருக்கு ரூ. 91 லட்சம் சம்பளத்தில் வேலை - மாலைமலர் செய்தி

கொல்கத்தா, நவ.5-

மேற்கு வங்கத்தில் உள்ள கரக்பூர் ஐ.ஐ.டி.யில் மாணவர்களுக்கு கேம்பஸ் இண்டர்வியூவிற்கு முன்னதாகவே தற்போது பல நிறுவனங்கள் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு தர ஆவலாக நேர்காணலில் ஈடுபட்டு வருகின்றன.

ஐ.ஐ.டி. மாணவர்களை தங்கள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்க்க, முன்னதாகவே நேர்காணல் நடத்தும் நிறுவனங்கள் கடந்த ஆண்டை விட மாணவர்களுக்கு 20 சதவீதம் அதிகமாக வேலை வாய்ப்புகளை அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஐ.ஐ.டி. அதிகாரிகள் தெரிவிக்கையில், 'முன்னதாக நடத்தப்பட்ட நேர்காணல் மூலம் ஏற்கனவே 125 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நேர்காணலுக்கு வந்துள்ள நிறுவனங்களில் பெரும்பாலானவை கடந்த ஆண்டை விட 20 சதவீதம் வரை சம்பளத்தை அதிகரித்துள்ளன. தற்போது அளிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பில் ஒரு மாணவருக்கு ரூ. 91 லட்சம் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என தெரிவித்தனர்.

சர்வதேச அளவில் கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாகவும், முதல் முறையாக மாணவர்களை தங்கள் நிறுவனத்திற்கு தேர்ந்தெடுக்க பல நிறுவனங்கள் இறுதிக்கட்ட நேர்காணலுக்காக ஐ.ஐ.டி. கரக்பூரின் தொழில் வளர்ச்சி மையத்தில் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெரிவித்த ஐ.ஐ.டி. கரக்பூரின் தொழில் மேம்பாட்டு மைய தலைவர் பாராய், 'இந்த ஆண்டு முதல் மாணவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் பெருநிறுவன பயிற்சி மையங்கள், மதிப்பீட்டு சோதனைகள், முன்னாள் மாணவர்களின் வழிகாட்டுதல் அமர்வு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது' எனக் கூறியுள்ளார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி