அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலிப் பணி இடங்கள்: விண்ணப்பிக்க டிசம்பர் 8 கடைசி

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 6,400 ஓட்டுநர், நடத்துநர் காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 8-ஆம் தேதி கடைசி நாளாகும். அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் ஆகிய காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக இருக்கும் 776 சேம ஓட்டுநர் உடன் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், சென்னை மண்டலத்தில் 260 பணியிடங்களும், திருச்சி மண்டலத்தில் 256 பணியிடங்களும், நாகர்கோவில் மண்டலத்தில் 260 பணியிடங்களும் காலியாக உள்ளன.


சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் 746 சேம ஓட்டுநர் பணியிடங்களும், 610 சேம நடத்துநர் பணியிடங்களும் காலியாக உள்ளன.


இதேபோல், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கோவை மண்டலத்தில் 899 சேம ஓட்டுநர், 702 சேம நடத்துநர் பணியிடங்களும், மதுரை மண்டலத்தில் 259 சேம ஓட்டுநர் பணியிடங்களும், 409 சேம நடத்துநர் பணியிடங்களும், கும்பகோணம் மண்டலத்தில் 181 சேம ஓட்டுநர், 37 சேம நடத்துநர் பணியிடங்களும், விழுப்புரம் மண்டலத்தில் 256 சேம ஓட்டுநர், 295 சேம நடத்துநர் பணியிடங்களும், திருநெல்வேலி மண்டலத்தில் 280 சேம ஓட்டுநர், 278 சேம நடத்துநர் பணியிடங்களும் காலியாக உள்ளன.


இதுதவிர, இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.


இந்தப் பணிகளில் சேர விரும்புபவர்கள் அந்தந்த போக்குவரத்துக் கழக அலுவலகங்களில் நவம்பர் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அந்தந்த மண்டல அலுவலகத்தில் டிசம்பர் 8-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி