தகுதியான ஆசிரியர்களை உருவாக்க ரூ.300 கோடி : புதிய திட்டம் என்ன?

பல்கலைகளுக்கு தகுதியான ஆசிரியர்களை அளிக்க,முதற்கட்டமாக, 1,000 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சிஅளிக்கப்படுகிறது; இதற்கு, 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது'என, பல்கலைக்கழக மானியக் குழு என்ற யு.ஜி.சி.,யின் துணைத்தலைவர் தேவராஜ்தெரிவித்தார்.


சென்னை பல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்ததேவராஜ் கூறியதாவது:

41 நிகர்நிலை பல்கலைகள் பிரச்னை குறித்து? நாடு முழுவதும், 41நிகர்நிலை பல் கலைகள் மீண்டும் ஆய்வு செய்யப்படு கிறது. அப்பல்கலைகளில், தகுதியான ஆசிரியர்கள் இல்லை என்பது தான்பிரச்னை. இதற்காக தான், தகுதிவாய்ந்த ஆசிரியர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


தகுதியான ஆசிரியர்களை உருவாக்கும் புதிய திட்டம் என்ன?

ஆசிரியர்கள் தகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 12வது ஐந்தாண்டு திட்டத்தில், 1,000 தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய, ஆந்திர மாநிலம், காக்கி நாடாவில், பல்கலை ஆசிரியர் கல்வி மையம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கு, முதற்கட்டமாக, 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, மனிதவள மேம்பாட்டுத் துறை, 5,000 ஆசிரியர்களை உருவாக்குகிறது. பல்கலைகள், யு.ஜி.சி.,யிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு, ஆசிரியர்களை கேட்டால், நாங்கள்அளிப்போம். அவர்களுக்கான சம்பளம் முழுவதையும், 
யு.ஜி.சி.,யே அளிக்கும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


கல்வி மையங்கள் மூடப்படும்!
பல்கலைகள் தொலைதூரக் கல்வி பெயரில், ஆங்காங்கே அமைக்கும் கல்வி மையங்களுக்கு, யு.ஜி.சி., கடிவாளம்போட்டுள்ளது.

இதுகுறித்து, அதன் துணைத் தலைவர் தேவராஜ் கூறியதாவது:
மாநில அரசின் சட்ட அடிப்படையில், தொலைதூரக் கல்வி நிறுவனங்கள், மாநிலத்திற்குள் மட்டுமே செயல்பட முடியும். பார்லி.,அனுமதி பெற்றிருந்தால், நாடு முழுவதும் கல்வி மையங்கள்அமைக்கலாம்.
நிகர்நிலை பல்கலைகள், தொலைதூரக் கல்வி மையங்களை துவக்க முடியாது. அனுமதியின்றி துவக்கினால், நடவடிக்கைஎடுக்கப்படும். அவர்களும் குறிப்பிட்ட பகுதிக்குள் மட்டுமே செயல்படமுடியும். கல்வி மையங்கள் பெயரில் தப்பு நடப்பதை, தடுத்து நிறுத்தி,அவற்றை மூட வேண்டும். நாங்கள், தொலைதூரக் கல்விக்குஎதிரானவர்கள் இல்லை. ஆன் - லைன் படிப்புகளை, அதிகளவில்கொண்டு வர வேண்டும் என்பதே, எங்கள் முடிவு.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி