முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான விண்ணப்பம் 10-ம் தேதி முதல் விநியோகம்


முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வு விண்ணப்பங்கள் வருகிற 10-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான 2013-14 மற்றும் 2014-15 ஆண்டுக்கான போட்டி எழுத்துத் தேர்வு அடுத்தாண்டு ஜன.10-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான அறிக்கை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. இப்பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மேற்குறிப்பிட்ட நாளில் இருந்து விநியோகம் தொடங்கி, தொடர்ந்து 25-ம் தேதி வரையில் வழங்கப்பட இருக்கிறது. எனவே இப்பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பபடிவங்களை பெற்று பூர்த்தி செய்து 25-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

PG TRB Application Sales From: 10.11.2014

PG TRB Application Sales - Venue: Concern District - CEO Office,

PG TRB Exam Date: 10.01.2015.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி