10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான PTA மாதிரி வினாப் புத்தகங்கள் 10.11.2015 முதல் அந்தந்த மாவட்டங்களில் கிடைக்கும்.விரிவான விவரங்கள்...

10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான PTA மாதிரி வினாப் புத்தகங்கள் 10.11.2015 முதல் அந்தந்த மாவட்டங்களில் கிடைக்கும். இதற்காக மொத்தம் 7 லட்சத்துக்கும் அதிகமான மாதிரி வினாப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், 10-ஆம் வகுப்பு, பிளஸ் 
2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், வினா வங்கி, மாதிரி வினா ஏடுகள், தீர்வுப் புத்தகங்கள் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நிகழாண்டும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வினா வங்கி, மாதிரி வினாப் புத்தகங்கள், தீர்வுப் புத்தகங்கள் தமிழ் வழி, ஆங்கில வழியில் ஒவ்வொரு பாட வரிசைக்கும் ரூ.25 முதல் ரூ.95 வரையில் விற்பனை செய்யப்படும். 10-ஆம் வகுப்புக்கு 3 புத்தகங்களைக் கொண்ட ஒரு தொகுதியின் விலை ஆங்கில வழிப் புத்தகங்கள் ரூ.200-க்கும், தமிழ் வழி புத்தகங்கள் ரூ.205-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளன.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி