இணையதள வசதி இந்திய கிராமங்களில் இலவசம்: வழங்க முன்வருகிறார் பேஸ்புக் தலைவர்

இந்தியா கிராமங்களுக்கு இலவசமாக இணையதள சேவை வழங்க, பேஸ்புக்சமூக தொடர்பு இணையதளத்தின் நிறுவனர்களில் முக்கியமானவரான மார்க்சுக்கர்பெர்க் முடிவு செய்துள்ளார். இந்தியா வந்துள்ள அவர், பிரதமர் நரேந்திரமோடி மற்றும் இந்திய அதிகாரிகளுடன் நடத்தியுள்ள பேச்சில், இதற்கானஆலோசனை நடைபெற்றதாகவும், விரைவில் இதற்கான முறையான அறிவிப்புவெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பேஸ்புக் என்ற பெயரில், இலவச, சமூக தொடர்பு இணையதளத்தை துவக்கிநடத்தி வருகிறார், 30 வயதே ஆன அமெரிக்கர் மார்க் சுக்கர்பெர்க். அந்நாட்டின்இரண்டாவது பெரிய கோடீஸ்வரர் இவர். முதலிடத்தில் உள்ளவர், மைக்ரோசாப்ட்கம்ப்யூட்டர் நிறுவனத்தின் தலைவர், பில் கேட்ஸ்.தகவல் தொழில்நுட்பத்தில்சிறந்து விளங்கும் இந்தியாவில், அதற்கான வாய்ப்புகளும், வசதி களும்,கிராமங்களை சரி வர சென்றடையவில்லை. இணையதள வசதிகள் இன்னமும்

கிராமப்புறங்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளன.இதற்கான வசதிகள்கிராமங்களில் கொஞ்சம் இருந்த போதிலும், நகர்புறங்களில் இருக்கும் அளவுக்குகிராமப்புறங்களில், இணையதளங்களின் செயல்வேகம் இல்லை.இந்தகுறைபாட்டை போக்கவும், இந்திய கிராமங்களில் அடிப்படை இணையதளசேவையை இலவசமாக வழங்கவும், பேஸ்புக் முன்வந்துள்ளது. இதன் மூலம்,உலக அளவில் இரண்டாவது மிகப் பெரிய, பேஸ்புக் இணையதளவாடிக்கையாளர்களை கொண்ட இந்தியாவை, முதலிடத்திற்கு கொண்டு செல்லமார்க் விரும்பியுள்ளார்.பேஸ்புக் இணையதள வாடிக்கையாளர்களில்முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா.

இது தொடர்பாக, மார்க் சுக்கர்பெர்க் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில்கூறியதாவது: 
இந்தியா போன்ற வளரும் நாடுகளில், ஆண்களுடன் ஒப்பிடும்போது, இணையதளங்களை, 25 சதவீத பெண்கள் தான் பயன்படுத்துகின்றனர். ஏராளமானோருக்கு அத்தகைய ஒரு வசதி இருப்பதே தெரியவில்லை. தெரிந்தபோதிலும், அதை ஏன் நாங்கள் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வி அவர்களிடம்உள்ளது.இதை நானாக சொல்லவில்லை. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஒருஆய்வில், அந்த ஆய்வில் பங்கேற்ற, 69 சதவீதத்தினர், இணையதளம் தங்களுக்குஎந்த அளவுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதை நாங்கள் அறியவில்லை என,தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவில், 911 என்ற, அவசர கால அழைப்பு எண்ணை,போன் இணைப்பு இல்லாதவர்களும் மேற்கொள்ள முடியும். இந்தியாவிலும் இதுபோன்ற நிலை ஏற்பட வேண்டும். இணையதளங்களிலும், அவசர கால, 100 என்றஎண்ணிற்கான அழைப்புகளை மேற்கொள்ள ஏதுவாக, கிராமப்புறங்களிலும்அடிப்படை இணையதள வசதியை இலவசமாக வழங்க முடிவுசெய்துள்ளோம்.இதற்காக, டெலிபோன் சேவை வழங்கி வரும் நிறுவனங்களுடன்நாங்கள் பேச்சு நடத்தி வருகிறோம். இந்த வகையில், உலகம் முழுவதும், 30 லட்சம்பேருக்கு ஏற்கனவே இணையதள வசதியைஏற்படுத்தியுள்ளோம்.இணையதளங்களை, அந்தந்த வட்டார மொழிகளில்மேம்படுத்த வேண்டும்; மொபைல் ஆப் எனப்படும் அப்ளிகேஷன்களை, வட்டாரமொழிகளில் தயாரிப்பதற்கு, பேஸ்புக் அதிக ஊக்கம் அளித்து வருகிறது; இதற்காக, 600 கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு, மார்க் சுக்கர்பெர்க்கூறினார்.

தண்ணீர் இல்லாத கழிப்பறை:

சாப்பிடவே வழியில்லாத ஏழை நாடுகளில் இணையதளம் தேவையா என்றகேள்விக்கு, மார்க் அளித்த பதில்:

தண்ணீர் இல்லாமல் டாய்லெட் கட்டி எந்த பயனும் இல்லை என்பது போன்ற நிலைஇப்போது உலகில், இணையதளத்திற்கு உள்ளது. இணையதளம் இல்லாமல்உலகம் இயங்க முடியாது என்ற அளவிற்கு நிலைமை மாறிவிட்டது.ஜாம்பியாபோன்ற ஆப்ரிக்காவின் மிகவும் ஏழ்மையான நாட்டில், கருவுற்ற பெண்,தன்னையும், தன் குழந்தையையும் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பதுகுறித்து நாங்கள் இணையதளம் மூலம் இலவசமாக யோசனைஅளிக்கிறோம்.எச்.ஐ.வி.,க்கு எதிராக, அந்நாட்டில் மிகப்பெரிய அளவில்விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

பிரமாண்ட நிறுவனங்களின் தலைவர்கள் வருகை:

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இந்தியாவில் ஏராளமாகஇருப்பதால் தான், உலகின் பிரமாண்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல்தொடர்பு நிறுவனங்களின் தலைவர்கள் இந்தியா வந்த வண்ணமாகஉள்ளனர்.மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, பில்கேட்ஸ், அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, சத்யா நாதெள்ளா,அமேசான் இணையதள நிறுவனத்தின் தலைவர், ஜெப் பெஸோஸ் போன்றோர்,இந்தியா வந்து, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த நிலையில், பேஸ்புக்இணையதளத்தின் நிர்வாகிகளில் ஒருவரான மார்க் சுக்கர்பெர்க்கும், பிரதமர்மோடியை நேற்று சந்தித்தார்.பிரதமர் மோடியும், இணையதளம், சமூக தொடர்புஇணையதளம், மொபைல் போன் போன்ற சாதனங்களையும், தொழில்நுட்பவசதிகளையும் பயன்படுத்துவதில் வல்லவர். லோக்சபா தேர்தல் பிரசாரத்தில்,ட்விட்டர், பேஸ்புக் போன்ற இணையதளங்களை அவர் அதிகமாகபயன்படுத்தினார்.

மார்க்கின் மகத்தான திட்டம்:

டில்லிக்கு நேற்று முன்தினம் வந்த பேஸ்புக் நிர்வாகி மார்க் சுக்கர்பெர்க், தன்செயல்திட்டம் குறித்து விரிவாக பேட்டியளித்தார்.

அதில், முக்கியமான அம்சங்களாவன:

*உலகம் முழுவதும், 270 கோடி பேருக்கு இணையதள வசதி உள்ளது. இன்னமும், 450 கோடி பேருக்கு இணையதள சேவை வழங்கப்பட வேண்டும். இதற்கு தடையாகஇருப்பது, போதிய

கட்டமைப்பு வசதி இல்லாமை மற்றும் இதற்கான செலவு

அதிகரிப்பு தான்.

*உலகம் முழுவதும், 250 கோடி பேர், நாள் ஒன்றுக்கு, 120 ரூபாய் சம்பளம்பெறுபவர்களாகத் தான் உள்ளனர்; அவர்களுக்கு இணையதளம் எட்டாக்கனியாகஉள்ளது. அதற்கான கட்டமைப்பை மேம்படுத்த சூரிய ஒளி சக்தி மூலம்செயல்படும் விமானங்களை இயக்கி, இணையதள சேவையை மேம்படுத்தஉள்ளோம்.



*இந்தியாவில் மிகச் சிறந்த திறன் வாய்ந்த பொறியாளர்களும், வல்லுனர்களும்உள்ளனர்; அவர்களின் திறமையை பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.

*இந்தியா நிறைய தொழில்நுட்ப புரட்சிகளை உருவாக்கிய நாடு. உதாரணமாக,பசுமை புரட்சி, தகவல் தொடர்பு புரட்சி, செவ்வாய் கிரக ஆராய்ச்சி போன்றவற்றில்குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.

*நாள் ஒன்றுக்கு, 2,000 கோடி எஸ்.எம்.எஸ்., தகவல்கள் அனுப்பப்படுகின்றன.இதற்கான செலவை குறைக்க, நாங்கள் தொலைத் தொடர்பு வழங்கும்நிறுவனங்களுடன் பேசி வருகிறோம். அதில் வெற்றி பெற்றால், 10 ஆயிரம் கோடிஎஸ்.எம்.எஸ்., தினமும் அனுப்பப்படும்.

10.89 கோடி பேரிடம் இணையதள வசதி:

இந்தியாவில் இணையதள வசதி, அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. 2013ல், 7.78 கோடி பேரிடம் தான் இணையதள வசதிகள் இருந்த நிலையில், அந்தஎண்ணிக்கை அசுரத்தனமாக அதிகரித்து வருகிறது; இந்த ஆண்டின் இறுதியில்,இணையதள வசதி கொண்டவர்களின் எண்ணிக்கை, 10.89 கோடியாக அதிகரிக்கும்என, நம்பப்படுகிறது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி