அஞ்சலக நடைமுறைகள் எப்படி?



சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்நடுநிலை பள்ளி மாணவ மாணவியர்அஞ்சலக தேசியவாரவிழாவினைமுன்னிட்டு அஞ்சலக நடைமுறைகள் பற்றி முழுவதுமாக அறிந்துகொள்ளும் வாய்ப்பினை பெற்றனர்.

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவமாணவியர்க்கு அஞ்சலகம் தொடர்பான நடைமுறைகள் அறிந்துகொள்ள தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் ஏற்பாடு செய்தார்.
தேவகோட்டை அஞ்சலக தலைமை அதிகாரி ராமசந்திரன் சம்மதம் தெரிவித்தார்.

மாணவர்கள் பள்ளியிலிருந்து அஞ்சலகத்திற்கு சுற்றுலாவிற்கு பயணிப்பது போல் உற்சாகத்துடன் அனைவரும் சென்றனர். அஞ்சலக எழுத்தர் சத்யா அனைவரையும் வரவேற்றார். அஞ்சலக எழுத்தர்தன்ராஜ், அஞ்சலக அலுவலர்கள் செல்வகணேசன், ஷேக் அலாவுதீன் ஆகியோர் மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார்.
அஞ்சலகத்தின் செயல்பாடுகள் என்ன, என்ன என்பது குறித்துவிளக்கப்பட்டது.


அஞ்சலகத்தில் பொதுமக்கள் பயன்பாடும்,பொதுமக்களுக்குஅஞ்சலகத்தின் சேவை குறித்தும் எடுத்து கூறினார்கள்.அஞ்சலகத்தில் அமைந்து உள்ள ஒவ்வொரு பிரிவையும்தனித்தனியே மாணவர்களை அழைத்து சென்று விளக்கம்அளித்தார்.தபால்கள் பிரிப்பது எப்படி? தபால்கள் உரிய இடங்களுக்குஅனுப்பப்பட்டு வீடுகளுக்கு சென்றடைவது எப்படி? அஞ்சல் அட்டை,உள்நாட்டு தபால் சேவை, ஒப்புதல் அட்டை, மணி ஆர்டர் படிவம்பூர்த்தி செய்வது எப்படி? பணம் செலுத்தும் படிவம்,பணம் எடுக்கும்படிவம்,ஆகியவை பூர்த்தி செய்வது எப்படி? பதிவு தபால் என்னஎன்பது தொடர்பாகவும்,பதிவு தபாலுக்கும் ,விரைவு தபாலுக்கும் என்ன வேறுபாடு என்பதையும் விளக்கமாக எடுத்தகூறினார்கள் .

அஞ்சலகத்தின் முக்கிய சேவைகளாக உள்ள இ - போஸ்ட் ,முக்கியநகரங்களுக்கு பொது மக்கள் தங்களது சரக்குகளை குறைந்தவிலையில் அனுப்பி வைக்கப்படும் தபால் சேவை, உள்நாட்டில் பணபரிமாற்ற சேவை, வெளிநாடுகளுக்கு தபால்கள்,பார்சல்கள் அனுப்ப அறிமுகம் செய்யப்பட்டுள்ள world net express சேவை, Mobile Money System, IMO என பல தகவல்கள் குறித்து விளக்கம் அளித்தனர். மைஸ்டாம்ப், பணம் செலுத்தும் கவுன்ட்டர் ,பார்கோடு மூலம் கணினியில் எவ்வாறு பதிவு செய்தல் என்பதையும் செயல் விளக்கம்அ ளித்தனர். மாணவி சொர்ணம்பிகா, கிருஷ்ணவேணி, மாணவர்கள் சூர்யா , நடராஜன், ராம்குமார், பார்த்திபன், ஆகியோர் படிவங்கள் பூர்த்தி செய்வது தொடர்பாக கேள்விகள் கேட்டு பதில் பெற்றனர். சிலமணி நேரங்கள் மாணவ, மாணவியர் உற்சாக வெள்ளத்தில் திளைத்தனர். மாணவர்களை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை ஆசிரியை செல்வமீனாள் மற்றும் ஆசிரியர் ஸ்ரீதர் ஆகியோர் செய்திருந்தார்கள். நிறைவாக பள்ளியின் சார்பாகஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி