வல்லபாய் படேல் பிறந்தநாளை தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாட யு.ஜி.சி. அறிவுறுத்தல்

சுதந்திர போராட்ட வீரரும் சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினமான அக்., 31ம் தேதியை தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாட வேண்டும் என பல்கலைகளுக்கு பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி., ) அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து மத்திய, மாநில, தனியார், நிகர்நிலை பல்கலை துணைவேந்தர்களுக்கு யு.ஜி.சி., தலைவர் வேத பிரகாஷ் எழுதியுள்ள கடிதம் எழுதியுள்ளார். அதில், சர்தார் வல்லபாய் படேல், பிறந்த தினமான அக்., 31ம் தேதியை தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாட மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
எனவே, பல்கலைகள் தங்கள் கீழ் செயல்படும் கல்லூரிகளுக்கு, இதன் விவரங்களை அறிவுறுத்தி ஒருமைப்பாட்டிற்கான ஓட்டம் ஒன்றை நடத்தி மாணவர்களை ஒருமைப்பாட்டு உறுதிமொழியையும் ஏற்கச் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி