சாஸ்த்ரா பல்கலை. பேராசிரியருக்கு "இளம் அறிவியல் அறிஞர்' விருது

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் அதிநுண்நுட்பவியல், உயிரியல் புத்தாக்கப்பொருள் உயராய்வுத் துறை இயக்குநர் எஸ். சுவாமிநாதன், மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் 2015-ம் ஆண்டுக்கான "இளம் அறிவியல் அறிஞர்' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டாக்டர் சுவாமிநாதனின் தலைமையில் செயல்படும் உயிரியல் புத்தாக்கப் பொருள் உயராய்வு மையத்தின் ஆய்வுப் பணிகளை அங்கீகரிக்கும் நோக்கில் இவ்விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அமெரிக்காவிலுள்ள பிலடெல்ஃபியா மாகாண ட்ரெக்ஸல் பல்கலைக்கழக வேதியியல், உயிர் வேதியியல் பொறியியல் துறையில், சுவாமிநாதன் முனைவர் பட்டம் பெற்றார். முனைவர் பட்ட ஆய்வுக்குப் பிறகு, அமெரிக்காவிலுள்ள சால்லோட்டெஸ்வில்லே மாகாணத்திலுள்ள வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் மூட்டுவியல் அறுவை சிகிச்சை துறையில் ஆய்வியல் இணையாளராகச் சேர்ந்தார். அங்கு அவர் குறைந்த வெப்பநிலை முதுகுத் தண்டு வட இணையகங்கள் சேர்ப்பு குறித்து கற்றறிந்தார்.

2009-ஆம் ஆண்டுக்குரிய இந்திய புத்தாக்கப் பொருள் ஆய்வு சமூகத்தின் பதக்கத்தைப் பெற்றார். புத்தாக்கப் பொருள், முறைமை ஆகியவற்றில் ஒரு குறிப்பிட்ட துறையில் வல்லமை காட்டியதை அங்கீகாரம் செய்யும் வகையில் அவருக்கு இந்தப் பதக்கம் வழங்கப்பட்டது.

2006-ஆம் ஆண்டில் உயிரியல் தொழில்நுட்பத் துறை இவருக்குப் புதுமைகாண் படைப்புக்காக "இளம் உயிரியல் தொழில்நுட்ப ஆய்வாளர்' விருதை வழங்கியது.

இப்போது, 2015-ம் ஆண்டுக்கான அதிநுண்நுட்ப அறிவியல், தொழில்நுட்பத்துக்கான "இளம் அறிவியல் அறிஞர்' விருதுக்காக மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த விருது அடுத்த ஆண்டு ஜனவரியில் இந்திய அதிநுண்நுட்பவியல் வல்லுநர்களின் சந்திப்பு நிகழ்ச்சியின்போது வழங்கப்படும்.

இவருடன் இந்திய அறிவியல் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பி.எஸ். அனில்குமாருக்கும் விருது வழங்கப்படவுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி