அமெரிக்காவுக்கு 5 நாள் சுற்றுப்பயணமாக சென்றிருந்த பிரதமர் மோடிக்கு அதிபர் ஒபாமா ஒரு அரிய புத்தகத்தை பரிசளித்துள்ளார். இது பிரதமர் மோடியை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
அப்படி என்னதான் அந்த புத்தகத்தில் இருந்தது?
1893-ஆம் ஆண்டு வெளிவந்த 'பார்லிமெண்ட் ஆப் வேர்ல்ட்ஸ் ரிலீஜன்ஸ்' என்ற புத்தகத்தில் சுவாமி விவேகானந்தர் எழுதிய கருத்துக்கள் அடங்கிய பேப்பரும் இணைக்கப்பட்டிருக்கிறது. அந்த புத்தகத்தையே ஒபாமா மோடிக்கு பரிசளித்திருக்கிறார்.
இந்த பரிசை பிரித்தவுடன் ஆச்சர்யப்பட்டு போன பிரதமர் மோடி டுவிட்டரில் தனது வியப்பை பதிவு செய்துள்ளார். அதாவது, அதிபர் ஒபாமா விலை மதிப்பில்லாத மிக உயர்ந்த அரிய பொக்கிஷத்தை எனக்கு பரிசாக அளித்திருக்கிறார். அது ஒரு அரிய புத்தகம் என்று தெரிவித்தார். அந்த புத்தகத்தின் சில படங்களையும் டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார் மோடி.




