புயலுக்கு பெயர் - ஹூட் ஹூட்

புயல் சின்னம் உருவாகும் போதெல்லாம்,அதற்கு ஒரு பெயர் சூட்டப்படுவது பற்றி அனைவரும் அறிந்திருப்பார்கள். அவற்றிற்கு எவ்வாறு பெயர் சூட்டப்படுகிறது? 
ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று புயல்கள் உருவானால் குழப்பம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் தான் மனிதர்களைப் போலவே புயலுக்கு பெயர் வைக்கும் முறை உருவானது.
20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆஸ்திரேலியா தான் இந்தப் பழக்கத்தைமுதலில் தொடங்கி வைத்தது. ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையத்தினர் மக்களிடம்செல்வாக்கு குறைந்த அரசியல் வாதிகளின் பெயர்களை புயல்களுக்கு சூட்டியுள்ளனர். பின்னர் 1954-ஆம் ஆண்டு இந்தப் பழக்கத்தை அமெரிக்கா தொடங்கியது.
இந்தியாவைப் பொறுத்தவரை வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும்புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறை2004-ஆம் ஆண்டில் உருவானது. இந்தியா,வங்கதேசம், மாலத்தீவு,‌ மியான்மர், ஓமன்,பாகிஸ்தான், தாய்லாந்த், இலங்கை ஆகிய 8நாடுகள் இணைந்து பெயர் பட்டியலைத் தயாரித்துள்ளன.
நாம் கடந்து வந்த புயல்களில் லைலா என்ற பெயர் பாகிஸ்தான் கொடுத்தது. ஜல் என்ற பெயர் இந்தியா கொடுத்திருந்த பெயர். தானே என்ற பெயரை மியான்மரும், மகாசேன் என்ற பெயர் இலங்கையாலும் கொடுக்கப்பட்டதாகும்.
இதே போல் தாய்லந்து கொடுத்த பெயரான பைலின், மாலத்தீவு பெயரிட்ட மாதி புயலைத் தொடர்ந்து ஓமன் கொடுத்துள்ள பெயரைத் தாங்கி தற்போது ஹூட் ஹூட் புயல் உருவாகியுள்ளது.
ஹூட் ஹூட் என்பது இஸ்ரேலின் தேசியப் பறவை என கூறப்படுகிறது. இதற்கு அரபிய மொழியில் தாலாட்டு என்று அர்த்தமாம். ஆனால் நிச்சயம் இந்த ஹூட் ஹூட்தாலாட்டி நம்மை தூங்க வைக்கப்போவதில்லை.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி