நோபல் பரிசு வென்ற இந்தியர்கள்: தாகூர் முதல் கைலாஷ் வரை

இந்தியக் குடிமக்கள்

       மகாகவி ரவீந்திரநாத் தாகூருக்கு, இலக்கியத்துக்கான நோபல் பரிசு 1913-இல் வழங்கப்பட்டது. இதுவே இந்தியர் ஒருவருக்குக் கிடைத்த முதல் நோபல் பரிசு.

          தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி சர் சி.வி.ராமனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு 1930-ஆம் ஆண்டில் அளிக்கப்பட்டது.

அல்பேனியாவில் பிறந்து, இந்தியக் குடியுரிமை பெற்றவரான அன்னை தெரசாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு 1979-இல் வழங்கப்பட்டது.

அமார்த்யா சென்னுக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 1998-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

கைலாஷ் சத்யார்த்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு, இந்த ஆண்டு (2014) அறிவிக்கப்பட்டுள்ளது

வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள்

இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற ஹர்கோவிந்த் குரானாவுக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு 1968-இல் வழங்கப்பட்டது.

இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர், இயற்பியலுக்கான நோபல் பரிசை 1983-இல் வென்றார்.

இந்தியாவில் பிறந்து, பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் குடியுரிமை பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் 2009-இல் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றார்.

இந்தியாவில் பிறந்து, பிரிவினைக்குப் பின் பாகிஸ்தானியரான அப்துஸ் சலாமுக்கு 1979-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இந்தியாவில் பிறந்து, பிரிவினைக்குப் பின் முதலில் பாகிஸ்தானியராகவும், பின்னர் வங்கதேச நாட்டினராகவும் ஆன முகமது யூனுஸக்கு 2006-இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இந்தியாவில் பிறந்த வெளிநாட்டினர்

இந்தியாவில் பிறந்த, பிரிட்டிஷ் குடிமகனான ரொனால்டு ராஸக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு 1902-இல் வழங்கப்பட்டது.

இந்தியாவில் பிறந்த, பிரிட்டிஷ் குடிமகனான ரூட்யார்டு கிப்ளிங், இலக்கியத்துக்கான நோபல் பரிசை 1907-இல் பெற்றார்.

இந்தியாவில் வாழ்பவர்

திபெத்தைச் சேர்ந்த புத்த மதத் தலைவரான தலாய் லாமா, இந்தியாவில் கடந்த 1959 முதல் வசித்து வருகிறார். இவருக்கு 1989-இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக போராடும் இந்தியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்திக்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் சிறுமி மலாலாவுடன், அவர் இந்த பரிசை பகிர்ந்து கொள்கிறார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி