ஐ.ஓ.எஸ்.8.1 அப்டேட் பைலை வாபஸ் பெற்றது ஆப்பிள்.

மொபைல் சாதனங்களுக்கான தன்னுடைய புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, ஐ.ஓ.எஸ்.8, ஆப்பிள் நிறுவனம் அண்மையில் வெளியிட்டது. அடுத்து ஒரு வாரத்தில் இதற்கான அப்டேட் பைல் ஒன்றை ஐ.ஓ.எஸ்.8.1 என்ற பெயரில் தன் சர்வர் வழியாக வழங்கியது. ஆனால், தொடர்ந்து வந்த பலவிதபுகார்களை அடுத்து, ஏறத்தாழ 90 நிமிடங்களில், அப்டேட் பைலை வாபஸ் பெற்றது.

புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் சில கூடுதல் வசதிகளைத் தரும் வகையில், ஆப்பிள் ஐ.ஓ.எஸ்.8.1 தொகுப்பினை வெளியிட்டது. ஆனால், வசதிகளை மேம்படுத்துவதற்குப் பதிலாக, இது ஐபோன்களில், குறிப்பாக ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ், தீவிர பிரச்னைகளை ஏற்படுத்தியது.ட்விட்டர் தளத்தில், நூற்றுக்கணக்கான ஆப்பிள் போன் வாடிக்கையாளர்கள், இந்த அப்டேட் பைல் இயக்கப்பட்டவுடன், செல் அழைப்புகள் கிடைக்கவில்லை; அதனை புதிய அப்டேட் முடக்கிவிட்டதாகக் குற்றம் சாட்டினார்கள். பல்லாயிரக்கணக்கான ஐபோன்கள், தங்களுக்கு மொபைல் சேவை தரும் நிறுவனங்களின் அலைவரிசைகளைத் தேடிக் கொண்டே இருந்தன. பல போன்கள் "No signal" செய்தியை அளித்தன.

மேலும், டெக்ஸ்ட் மெசேஜ் கிடைக்கப் பெறுகையில், எதிர்பாரதவிதமாக டேட்டா பயன்பாடு இருப்பதாக போனில் காட்டப்பட்டது. அடுத்ததாக, விரல் ரேகை தொடு உணர் டூல் பிரச்னை அனைத்து போன்களிலும் ஏற்பட்டது. 
ஆப்பிள் நிறுவன அதிகாரிகள், பல மொபைல் சேவை நிறுவனங்கள் இணைப்பு பெற்ற ஐபோன்களைச் சோதனை செய்து, பிரச்னை உண்மைதான் என்றும், சற்று தீவிரமானது என்றும் உறுதி செய்தனர்.

உடனே, அப்டேட் பைலை வாபஸ் பெற்றனர். அத்துடன், தங்கள் வாடிக்கையாளர்களை, பின் சென்று, ஐ.ஓ.எஸ். 8க்கு மாறுமாறு கேட்டுக் கொண்டனர். இந்த விபரங்கள், http://support.apple.com/kb/HT6487என்ற முகவரியில் தரப்பட்டுள்ளன. ஐ.ஓ.எஸ்.8க்கு மாறுவது எப்படி என்பதற்கான வழிகளும் தரப்பட்டுள்ளன. 

ஐ.ஓ.எஸ்.8.1., ஐபோன்களில் உள்ள கீ போர்ட்களில் காணப்பட்ட பிரச்னைகளுக்கும், ஹெல்த் கிட் இயக்கத்தில் இருந்த பிரச்னைகளுக்கும் தீர்வாக தரப்பட்டது. ஆனால், ஏற்பட்ட புதிய பிரச்னைகளில், யாரும் அது எந்த நோக்கத்திற்காக வெளியிடப்பட்டதோ, அது தீர்ந்ததா எனப் பார்க்கவில்லை.இந்த பிரச்னைகள், குறிப்பிட்ட நாடு என்றில்லாமல், அமெரிக்கா, கிரேட் பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அனைத்திலும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டில், ஐ.ஓ.எஸ்.7 வெளியாகி, ஒரு வாரத்தில், ஐபோன் 5 எஸ் போனில் உள்ள ஒரு பிரச்னையைத் தீர்க்க, ஐ.ஓ.எஸ்.7.1 தொகுப்பினை ஆப்பிள் வெளியிட்டது நினைவில் இருக்கலாம். ஆனால், அது லாக் ஸ்கிரீனில் பிரச்னை ஏற்படுத்துகிறது என்ற குற்றச் சாட்டு வந்ததால், அடுத்த வாரத்தில் அதனைச் சரி செய்திட ஐ.ஓ.எஸ்.7.2 வெளியிடப்பட்டது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி