சி.பி.எஸ்.இ., 'நெட்' தேர்வுவிண்ணப்பிக்க நவ., 15 கடைசி

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,) சார்பில் நடக்கும் 'நெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, நவ., ௧௫ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி, பல்கலை உதவிப் பேராசிரியர் பணிக்கான 'நெட்' (தேசிய தகுதித் தேர்வு) தேர்வை இதுவரை யு.ஜி.சி., (பல்கலை மானியக் குழு) நடத்தி வந்தது. இந்நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,) இத்தேர்வை முதல்முறையாக வரும் டிச., மாதம் நடத்துகிறது. ஆண்டுக்கு இருமுறை, இத்தேர்வு சி.பி.எஸ்.இ., சார்பில் நடத்தப்பட்டவுள்ளது. 

cbsenet.nic.in/cbsenet/welcome.aspx என்ற இணையதளத்தில் துறைகள் என்ற பிரிவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான விண்ணப்பத்தை ஆன்-லைனில் சமர்ப்பிக்க நவ., 15ம் தேதி கடைசி நாளாகவும், அறிவிக்கப்பட்ட வங்கிக் கிளைகளில் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த நவ., 18ம் தேதியும் கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

'ஆன்லைன்' விண்ணப்பத்தை நவ., 19க்குள் நகல் எடுத்துக்கொள்ள வேண்டும். நகல் எடுத்த விண்ணப்பத்தைச் சம்பந்தப்பட்ட ஒருங்கிணைப்பு மையத்தில் சமர்ப்பிக்க, நவ., 25 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி