உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி எந்த மாநிலத்திலும் இட ஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்ட கூடாது. அப்படி தாண்ட வேண்டி சட்ட திருத்தத்தை மாநில அரசு கொண்டு வந்தால், அதனால் oc பிரிவினர் பாதிக்காவண்ணம் சட்டம் இயற்ற உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்காக தமிழக அரசு 69% இட ஒதுக்கீடு கொடுக்கும் போது தர வரிசையில் 31 சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதத்திற்குள் உள்ள oc பிரிவினருக்கு உபரியாக பணி இடங்களை ( super numeracy seats ) உருவாக்கி நியமனம் வழங்க வழி வகை செய்துள்ளது. இதன் G.O. இத்துடன் தரப்பட்டுள்ளது.