அஞ்சல் துறை - மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS) - பணி நியமன அறிவிப்பு

நம் நாட்டின் அஞ்சல் துறை பல நூற்றாண்டுகளைக் கடந்து வரலாற்று சிறப்புடைய தொன்மையான துறையாகும். கிழக்கிந்தியக் கம்பெனி காலத்திலேயே தமிழ் நாட்டிலும் அஞ்சல் செயல்பாடுகள் துவங்கிவிட்டன. இன்றைய தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக இ-மெயில், எஸ்.எம்.எஸ்., மொபைல் என்ற மாற்றங்கள் வந்த போதும் உணர்வுபூர்வமான தகவல் பரிமாற்றத்திற்கு இத்துறையே அடையாளமாக இருக்கிறது.

இத்தகைய பெருமைமிக்க தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள 34 மல்டி-டாஸ்கிங் ஊழியர் காலியிடங்களை விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பணி நியமனத்தின் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிட விபரம்: மல்டி டாஸ்கிங் ஸ்டாப் காலியிடங்கள் நிர்வாக அலுவலகங்கள் மற்றும் சப்-ஆர்டினேட் ஆபிஸ் என்ற இரண்டு பிரிவுகளின் கீழ் நிரப்பப்பட உள்ளன.
வயது: தமிழ்நாடு போஸ்டல் சர்க்கிளின் மல்டி டாஸ்கிங் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பிற்கு நிகரான படிப்பு அல்லது ஐ.டி.ஐ., படிப்பை முடித்தவர்கள் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட அஞ்சல் அலுவலகத்தின் மூலம் ரூ.100/-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளை சேர்த்து தொடர்புடைய அலுவலருக்கு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து அறியவும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 22.09.2014


இணையதள முகவரி: http://tamilnadupost.nic.in/rec/Notification.pdf

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி