இணையத்தில் இலவசத் தட்டச்சுப் பயிற்சி - the hindu tamil

கணினிப் பயன்பாட்டுக்குத் தட்டச்சுப் பயிற்சியே அடிப்படையாக இருக்கிறது. கணினிப் பயன்பாட்டுக்குத் தட்டச்சுப் பயிற்சி பெற்றிருக்க வேண்டுமென்கிற கட்டாயமில்லை... ஆனால், தட்டச்சுப் பயிற்சி பெற்றவர்கள் கணினியில் மிக விரைவாகச் செயல்பட முடிகிறது. இந்தத் தட்டச்சுப் பயிற்சியினை இணையத்தில் எளிமையாகக் கற்றுக் கொள்ள ஒரு இணையதளம் உதவுகிறது.


இந்த இணையதளத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் என்று இரண்டு முக்கியப் பிரிவுகளில் தட்டச்சுப் பயிற்சிக்கான வசதிகள் செய்யப்படிருக்கின்றன. பொதுவான தட்டச்சுப் பயிற்சி பெற விரும்புபவர்கள் இத்தளத்தில் மாணவர்கள் எனும் பிரிவில் கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம்.

புதிய கணக்குத் தொடங்கப்பட்டவுடன் கிடைக்கும் பக்கத்தில் தொடக்கநிலைப் பயிற்சி (Beginner Course), இடைநிலைப் பயிற்சி (Intermediate Course), மேம்பட்ட பயிற்சி (Advanced Course), சிறப்புநிலைப் பாடங்கள் (Specialty Lessons), என பல தலைப்புகளில் பாடங்கள் உள்ளன.

தொடக்கநிலைப் பயிற்சியில் விசைப்பலகையிலுள்ள விசைகளைப் பயன்படுத்துவதற்கான ஒன்பது வகையான தொடக்கப் பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பயிற்சிக்கு நாம் ஒவ்வொரு விசைக்கும் பயன்படுத்த வேண்டிய விரல்கள் குறித்தும், அதற்கான எழுத்துகள் குறித்தும் எளிமையாகப் படத்துடன் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.

இடைநிலைப் பயிற்சியில் அகரவரிசை (Alphabet ), நிறுத்தல் குறிகள் (Punctuation), பொதுவான ஆங்கிலச் சொற்கள் (Common English Words), எண்கள் (Numbers), வேகப் பயிற்சி (Speed Drills) என்று ஒன்பது வகையான பயிற்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. மேம்பட்ட பயிற்சியில் ஆறு வகையான பயிற்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. சிறப்புப் பாடங்கள் பயிற்சியில் ஏழு வகையான பயிற்சிகள் இடம் பெற்றிருக்கின்றன.

கட்டண அடிப்படையிலான பயிற்சியில் 16 வகையான பயிற்சிகள் இருக்கின்றன. இவற்றில் நாம் கட்டண அடிப்படையிலான பயிற்சியைத் தவிர்த்து பிற பயிற்சிகளை இலவசமாகப் பெற முடியும். இங்கு ஆங்கிலம், ஜப்பான், சீனம், கொரியன், போர்ச்சுக்கீசு உட்பட 26 மொழிகளிலான விசைப்பலகைகளில் பயிற்சி பெறமுடியும்.

தட்டச்சுப் பயிற்சி மேற்கொள்ள விரும்புபவர்கள் http://www.typingweb.com/ எனும் இணையமுகவரிக்குச் சென்று தங்களது பயிற்சிகளைத் தொடரலாம்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி