வரலாற்று அறிஞர்கள் அறிவோம்: ஜவஹர்லால் நேரு

இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியாகவும், அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவராகவும், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான "நவீன இந்தியாவின் சிற்பி" பாரத ரத்னா ஜவகர்லால் நேரு அவர்களைப் பற்றிய தகவல்களை சுருக்கமாக இந்த பகுதியில் பார்ப்போம்.
பிறப்பு: 14.11.1889 அன்று உத்திரப் பிரதேச மாநிலம்  (அலகாபாத் ஆனந்தபவன்)
இறப்பு: 27.05.1964
பெற்றோர்: மோதிலால் நேரு - சொரூபராணி
கல்வி: பள்ளிப் படிப்பை முடித்தும் கேம்பிரிட்சு பல்கலைகழக நுழைவுத் தேர்வுகளை 1907 இல் எழுதி, திரினிட்டி கல்லூரி சென்று இயற்கை அறிவியல் படித்தார். நேரு, அவருடைய திரைபோசில் இரண்டாவது இடம் பெற்று 1910 இல் பட்டம் பெற்றார். தந்தை வேண்டுகோளுக்காகப் சட்டம் படித்த நேரு, 1912 - இல் வெற்றிபெற்று, இன்னர் டெம்பில் ஆண்டின் இறுதியில் சட்டத்துறைக்கு அழைக்கப்பட்டார். சட்டப் பணிசெய்ய விரைவில் இந்தியா திரும்பினார்.
அரசியல் குரு: மகாத்மா காந்தியை அரசியல் குருவாக ஏற்றவர்.
தொழில்: வழக்கறிஞராக தொழில் புரிந்தார்.
திருமணம்: 1916 பிப்ரவரி 8 ஆம் தேதி கமலா கவுல் என்ற காஷ்மீரி பிராமணப்பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இந்திராபிரியதர்ஷினி என்ற மகள் பிறந்தார், பின்னாளில் அவர் இந்திரா காந்தி என்று அழைக்கப்பட்டார்.
1920 - இல் காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்தற்காக 1921 இல் நேரு முதல் முறையாகச் சிறைக்கு சென்றார். 1922ல் அப்போராட்டத்தை விலக்கியதால் நேரு விடுவிக்கப்பட்டார். அவருடைய போராட்டம் சத்தியாகிரக முறையில் இருந்தாலும், அவர் வாழ்நாளில் 9 வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டிவந்தது.
1936 - இல் சுதந்திர இயக்கத்தில் ஆர்வமாக செயல்பட்டு வந்த கமலா நேரு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.
நூல்: நேரு உலக வரலாற்றின் காட்சிகள் (1934), சுயசரிதை (1936) மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகிய நூல்களை எழுதினார்.
பத்திரிக்கை: நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிக்கையை 1938 ஆண் ஆண்டு துவக்கினார். அப்பத்திரிக்கை 2008 ஆம் ஆண்டு மூடப்பட்டது.
சிறப்பு பெயர்: இந்தியாவின் ஆபரணம், ரோஜாவின் ராஜா, ஆசிய ஜோதி என அழைக்கப்படுபவர்.
விடுதலை போராட்டத்தில் நேரு:
1912 - இல் பாரிஸ்டர் பட்டம் பெற்றார்.
1916 - இல் லக்னோ காங்கிரஸ் மாநாட்டில் காந்தியை முதன்முதலாக சந்தித்தார்.
1916 - இல் கமலா கவுல் என்பவரை மணந்தார்.
1916 - இல் கிஷான் சபையின் துணைத்தலைவரானார்.
1917 - நவம்பர் 19 அன்று இந்திரா பிரியதர்சினி பிறந்தார்.
1919 - 1932 வரை The Independent என்ற செய்தித்தாளை நடத்தினார்.
1929 - இல் காந்தியின் வழிகாட்டுதலின் படி லாகூர் காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமைத் தாங்கி நடத்தினார். பூரண சுயராஜ்ஜியம் தீர்மானத்தை நிறைவேற்றினார்.
1937 - பெய்ஸ்பூர் - காங்கிரஸ் மாநாட்டிற்குத் தலைமை வகித்தார். (கிராமத்தில் நடந்த முதல் மாநாடு).
1940 -இல் தனிநபர் சத்யாகிரகத்தின் பொது ஆச்சார்ய வினோபாபாவேவிற்கு அடுத்து இரண்டாவதாக கைது செய்யப்பட்டார்.
தனது சயசரிதையை "AN Autobiography" என்ற தலைப்பில் எழுதினார். (Toward Freedom என்ற பெயராலும் இந்நூல் அறியப்படுகிறது).
1945 - ஜூன் 15 ஆம் தேதி நேரு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கெடுத்ததற்காக கைது செய்யப்பட்டார்.
1947 - ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தபோது "விதியோடு செய்து கொண்ட ஒப்பந்தம்" என இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையையும், "உலகம் உறங்கும்போது இந்தியா விழித்துக்கொண்டது" எனவும் வர்ணித்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக மெளண்ட்பேட்டன் பிரபுவால் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.
நேருவின் முக்கியமான சாதனைகள்:
1950 - மார்ச் 15 நேரு தலைமையில் தேசிய திட்ட கமிஷன் அமைக்கப்பட்டது.
1951 - இல் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.
1952 - இல் முதல் பொதுத் தேர்தல்.
1952 - இல் முதல் ராஜ்ய சபா தேர்தல்.
1952 - இல் முதல் பாராளுமன்றம் கூடியது.
1952 - இல் தேசிய வளர்ச்சிக் குழு துவக்கம்
1953 - இல் UGC அமைக்கப்பட்டது.
1954 - இல் பஞ்ச சீலக் கொள்கையை வெளியிட்டார்.
தீன் மூர்த்தி பவன் - நேரு பிரதமராக இருந்த காலத்தில் அவருடைய இல்லமாகவும், தற்போது அவர் நினைவாக அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்தியாவின் பெருமை வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றைக செயல்பட்டு வருகிறது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி