சென்னை தெற்கு மண்டல அஞ்சலக பகுதியில் அஞ்சலக காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்கு முகவர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் நடக்கிறது. அஞ்சலக காப்பீட்டு திட்டங்களில், பகுதிவாசிகளை சேர்க்க, முகவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். அதற்கான நேர்காணல் சென்னை நகர தெற்கு மண்டல அஞ்சல்துறை நடத்துகிறது.
தி.நகர், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள, சென்னை நகர தெற்கு மண்டல அலுவலகத்தில், வரும் 10ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவிருக்கும் நேர்காணலில் கலந்துகொள்ளலாம். சுயவிவர குறிப்பு, முகவரி, வயது மற்றும் கல்வி சான்றுகளுடன் வரவேண்டும். குறைந்தபட்ச கல்வித்தகுதி ப்ளஸ் 2. வயது வரம்பு 18 முதல் 60. வரை உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றியோர், அங்கன்வாடி பணியாளர்கள், மகிளா மண்டல பணியாளர்கள், சுய உதவிக் குழுக்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், வேலைக்காக காத்திருப்பவர்கள், சுயதொழில் புரிபவர்களும் பங்கேற்கலாம். காப்பீட்டு திட்டத்தில் முன் அனுபவம் பெற்றோர், கணினி அறிவு மற்றும் தங்கள் வசிக்கும் பகுதியைப்பற்றி முழுமையாக தெரிந்து வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.