'மெரிட்' அடிப்படையில் பதவி : மத்திய அரசு அதிரடி உத்தரவு - தினமலர்

அனைத்து துறைகளிலும், முக்கிய பதவிகள் நியமனத்தில், 'மெரிட்' எனப்படும் தகுதி அடிப்படையிலான பட்டியலை பரிந்துரைக்குமாறு, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.


இதுகுறித்து, மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது: பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் கீழ் இயங்கும் அனைத்து துறைகளின் முக்கிய பதவிகள் நியமனத்தில், தகுதி வாய்ந்த நபர்களின் பட்டியல், 'அபாயின்மென்ட் கமிட்டி ஆப் கேபினட்' எனப்படும், ஏ.சி.சி.,க்கு பரிந்துரைக்கப்படுகிறது. இதில், மெரிட் அடிப்படையிலான பட்டியல் பரிந்துரைக்கப்படாதது, தெரிய வந்துள்ளது. எனவே, பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் துறைகளின் இணைச் செயலர், வாரியத் தலைவர், இயக்குனர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளின் நியமனத்தின் போது, மெரிட் அடிப்படை பட்டியலை அனுப்புமாறு, அனைத்து துறைகளுக்கும் உத்தரவிடப்படுகிறது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி