காலாண்டு தேர்வில் சென்டம் எடுக்கும் பள்ளிகள், மாணவர்களுக்கு வெகுமதிகள்

      காலாண்டு தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெறும் பள்ளிகளுக்கு விருதும், பாடவாரியாக சென்டம் மதிப்பெண் பெறும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ரொக்க பரிசும் வழங்கப்படும்" என, கல்வித்துறை அறிவித்துள்ளது.பத்தாம் வகுப்பிற்கு செப்.,17 முதல் 26 வரை, பிளஸ் 2விற்கு செப்.,15 முதல் 26 வரை காலாண்டு தேர்வு நடக்கிறது. அரசு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, காலாண்டு தேர்வுக்கு முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, காலாண்டு தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு விருது மற்றும் ரொக்க பரிசும், பாடவாரியாக சென்டம் பெறும் மாணவர்களுக்கும், சம்மந்தப்பட்ட பாட ஆசிரியர்களுக்கும் ரொக்க பரிசும் வழங்கப்படும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி