ஆசிரியர்கள் நியமனத் தடைக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு நாளை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவு கிடைக்கவில்லை என 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விளக்கமளித்தது.
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு நேற்று தனி நீதிபதி சசிதரன் தடை விதித்தார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் சோமையாஜி வழக்கு தொடர்ந்திருந்தார்.