சிறந்த ஆரம்ப பள்ளிகளை அரசால் அமைக்க முடியாதது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி...?


சிறந்த மருத்துவக் கல்லூரிகளை நடத்தும் அரசால், சிறந்த ஆரம்பபள்ளிகளை அமைக்க முடியாதது ஏன்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கல்வி உரிமை சட்டப்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்கும்படி சிறுபான்மையினர் அமைப்பும் நடத்தும் சில பள்ளிகளுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைஎதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிறுபான்மையினர் பள்ளிகள் வழக்கு தொடர்ந்தன. இந்த மனு நீதிபதிகள் ஏ.ஆர்.டாவே, லலித் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. கல்வி உரிமை சட்டவரம்புக்குள் சிறுபான்மையினர் பள்ளிகள் வராது என்றும், தங்களிடம் சிறுபான்மையினர் தேசிய கமிஷன் சான்றிதழ் இல்லாததால் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் சேர்க்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும்என சிறுபான்மையினர் பள்ளிகள் சார்பில் வாதிடப்பட்டது. இதற்குதடை விதித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 10ம்தேதிக்கு ஒத்தி வைத்தனர். அப்போது நீதிபதிகள் கூறியதாவது: 

அரசு பள்ளிகள்தரமானதாக இல்லாததால், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் மாணர் களை சேர்க்க போட்டி நிலவுகிறது.மருத்துவக் கல்லூரிகள் விஷயத்தில், தனியாரை விட, அரசுகல்லூரிகள்தான் சிறந்தவை என தேர்வு செய்யப்படுகிறது.அப்படியிருக்கும்போது அரசால் ஏன் தரமான ஆரம்ப பள்ளிகளைஅமைக்க முடியவில்லை? தரமான ஆரம்ப பள்ளிகளை அதிகம்அமைக்க வேண்டியது அரசின் கடமை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி