உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக எச்.எல்.தத்து நியமனம்


உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எச்.எல்.தத்து வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரான அவரது முழுப்பெயர் ஹண்டியாலா லட்சுமிநாராயணசுவாமி தத்துவாகும். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக தத்துவை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் அறிவித்துள்ளது. இப்போதைய தலைமை நீதிபதியான ஆர்.எம்.லோதா, இம்மாதம் 27ஆம் தேதி ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, தத்து புதிய தலைமை நீதிபதியாக வரும் 28ஆம் தேதி பொறுப்பெற்க உள்ளார்.

தற்போது நீதிபதி லோதாவுக்கு அடுத்தபடியாக மூத்த நீதிபதியாக உள்ள தத்து(63), 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கை விசாரிக்கும் அமர்வுக்குத் தலைமை தாங்கி விசாரித்து வருகிறார். அவர் தலைமை நீதிபதி பதவியை 14 மாதங்கள் வகிப்பார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2015), டிசம்பர் 2ஆம் தேதி நிறைவடையும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி