ஆசிரியர் பணி நியமனத்திற்கு தடை,ஆசிரியர் பணி நியமனத்திற்கு கவுன்சிலிங் நடத்தி கொள்ளலாம்.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை சேர்ந்த பி.எட். பட்டதாரியான பவுசிநேசல் பேகம் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:–


பி.லிட்., பி.எட். பட்ட தாரியான நான் ஆசிரியர் தகுதித்தேர்வில்வெற்றி பெற்று, பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்விலும்தேவையான மதிப் பெண்களை பெற்றுள்ளேன். தற்போது பட்டதாரி ஆசிரியர் பணி இடத்திற்கு தேர்வு நடைபெற்று வருகிறது.இந்த தேர்வில் ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் மட்டுமல்லாமல் பிளஸ்–2, டிகிரி, பி.எட்., படிப்புகளில் எடுத்த மதிப்பெண்களை கொண்டு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுகிறது.2000–மாவது ஆண்டுக்கு முன்பு பிளஸ்–2 தேர்வில் 1200–க்கு 1000–த்துக்குள் தான் மதிப்பெண் எடுக்க முடிந்தது. ஆனால் இப்போது 1200–க்கு 1195 மதிப்பெண்கள் வரை எடுக்கக்கூடிய நிலை உள்ளது.2000–மாவது ஆண்டுக்கு முன்புள்ள பாடத் திட்டங்கள் கடினமாக இருந்தன. கல்வித்தரமும் போதிய அளவு இல்லை. இதுபோன்ற சூழ்நிலையில் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் பணிநியமனம் வழங்கினால் எங்களை போன்றோர் பாதிக்கப்படுவார்கள். எனவே வெயிட்டேஜ் முறையில் ஆசிரியர் பணி நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

புதுக்கோட்டை தமிழரசன் உள்பட 15 பேர் இதே பிரச்சினைக்காக மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வக்கீல்கள் சேவியர் ரஜினி, கணபதி சுப்பிரமணியம் ஆகியோர் ஆஜராகிவாதாடினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி சசிதரன், ஆசிரியர் பணி நியமனத்திற்கு கவுன்சிலிங் நடத்தி கொள்ளலாம். ஆனால் பணி நியமன உத்தரவுகள் வழங்கக்கூடாது என்று உத்தரவிட்டார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி