தமிழக மாணவர்கள் 7 பேர் ஜப்பானுக்குச் செல்ல தேர்வு

      மாணவர்கள் பரிவர்த்தனை திட்டத்தின் கீழ், தமிழகத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் ஜப்பான் நாட்டுக்குச் செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜப்பான்-கிழக்கு ஆசியா இடையே மாணவர்கள், இளைஞர்கள் பரிவர்த்தனை திட்டத்தின் (ஜெனிசிஸ்) கீழ் இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் பள்ளி மாணவர்கள் ஜப்பான் நாட்டுக்குச் செல்கின்றனர்.
கல்வி, விளையாட்டில் சிறந்து விளங்கும் இந்த மாணவர்கள் ஜப்பான் நாட்டில் 10 நாள்கள் தங்கியிருந்து அந்த நாட்டின் கலாசாரம், விளையாட்டுத் திறமை போன்றவற்றை வளர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.
இதற்காக பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு மாணவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் பெறப்பட்டன. இந்த விவரங்கள் மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டன.
அதிலிருந்து கீழ்க்கண்ட 7 மாணவர்கள் ஜப்பான் செல்வதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மூன்று பேர் படிப்புக்காகவும், 4 பேர் விளையாட்டுப் பிரிவிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களின் விவரம்:
1.எஸ். பிரபாகரன் - பி.வி.கே.என். மேல்நிலைப் பள்ளி, பொங்கலூர்.
2. எஸ்.சில்வியா - எஸ்.பி.எம். மேல்நிலைப் பள்ளி, அம்பத்தூர், சென்னை.
3. டி.யோகேஸ்வரி - அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, குன்னத்தூர், திருப்பத்தூர்.
விளையாட்டுப் பிரிவு:
4. வி.ரோஹித் (கூடைப்பந்து) - செயின்ட் பீட்டர் மேல்நிலைப் பள்ளி, ராயபுரம், சென்னை.
5. ஆர்.ராமகிருஷ்ணன் (டென்னிஸ்) - கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஏற்காடு.
6. கே.அருண் வெங்கடேஷ் (டென்னிஸ்) - எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளி, வடசேரி, நாகர்கோவில்.
7. எம்.காயத்ரி (வாலிபால்) - செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளி, ஏ.என்.மங்கலம், சேலம்.
இவர்களுடன் மேற்பார்வையாளராக வேலப்பஞ்சாவடி அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் எஸ்.ரவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் ஜப்பான் செல்லும் தேதி உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி