தமிழகத்தைச் சேர்ந்த 22 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

ஆசிரியர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் 350 ஆசிரிய, ஆசிரியைகளுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. டெல்லியில் இன்று நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார். இந்த விருது, ரூ.25 ஆயிரம்ரொக்கப் பரிசு, வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியது. இவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 22 பேர்.

தேசிய நல்லாசிரியர் விருது’ பெறும் தமிழக ஆசிரியர்கள் பெயர் விவரம் வருமாறு: 


1. டி.ஆரோக்கிய மேரி - தலைமை ஆசிரியை, செயின்ட் ஆனிஸ் தொடக்கப் பள்ளி, ராயபுரம், சென்னை. 
2. என்.சம்பங்கி - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கந்தநேரி, வேலூர். 
3. எஸ்.கந்தசாமி - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கப்பை கிராமம், செஞ்சி. 
4. எஸ்.செல்வராஜு - பட்டதாரி ஆசிரியர், ஆனந்தராஜு அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி, மறைஞாயநல்லூர், நாகப்பட்டினம். 
5. என்.நடராஜன் - தலைமை ஆசிரியர், அரசு ஆதிதிராவிடர் நலத்துறை தொடக்கப் பள்ளி, சிக்கல்நாயக்கன்பேட்டை, திருப்பனந்தாள். 
6. பி.ஆண்ட்ரூஸ் - தலைமை ஆசிரியர், சி.எஸ்.ஐ. தொடக்கப் பள்ளி, உறையூர், திருச்சி. 
7. பி.டெரன்ஸ் - தலைமை ஆசிரியர், ஆர்.சி. அமலராக்கினி நடுநிலைப் பள்ளி, குளித்தலை. 
8. கே. நளினி - தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தாரவைதோப்பு, பாம்பன், ராமநாதபுரம். 
9. எஸ். முத்தையா - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கே.செம்பட்டி, உசிலம்பட்டி, மதுரை. 
10. கே.உதயகுமார் - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, சின்னகொண்டலாம்பட்டி, பனைமரத்துப்பட்டி ஒன்றியம், சேலம். 
11. நசிருதீன் - தலைமை ஆசிரியர், உருது பெண்கள் நகராட்சி நடுநிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி 
12. கே.ஆர். ராமகிருஷ்ணன் - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, வெள்ளாளப்பாளையம், கோவை. 
13. வி.பி.தாமஸ் - தலைமை ஆசிரியர், பாரதமாதா அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி, உப்பட்டி, நீலகிரி. 
14. ஏ. விநாயக சுந்தரி - தலைமை ஆசிரியை, சங்கரகுமார் தொடக்கப் பள்ளி, சங்கரலிங்கபுரம், கோவில்பட்டி. 
15. எஸ்.ராமசாமி - தலைமை ஆசிரியர், வேணுகோபால விலாச அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி, விஸ்நாம்பேட்டை, பூண்டி, தஞ்சாவூர். 
16. ஆர்.நீலகண்டன் - தலைமை ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, புதுப்பேட்டை, வேலூர். 
17. சசி ஸ்வரண்சிங் - முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர், பதிப்பக செம்மல் கே.கணபதி அரசு மேல்நிலைப் பள்ளி, கோடம்பாக்கம், சென்னை. 
18. எஸ்.கஸ்தூரி - தலைமை ஆசிரியர், நகராட்சி மேல்நிலைப் பள்ளி, ஜமீன் பல்லாவரம், சென்னை. 
19. எஸ்.ஆதியப்பன் - தலைமை ஆசிரியர், எம்.எஃப்.எஸ்.டி. மேல்நி்லைப் பள்ளி, சவுகார்பேட்டை, சென்னை. 
20. எம். செல்வசேகரன் - முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், தி கிரசன்ட் மேல்நிலைப் பள்ளி, ஆவணிபுரம், ஆடுதுறை, தஞ்சாவூர். 
21. ஆர்.கஸ்தூரி - பட்டதாரி ஆசிரியை, மார்னிங் ஸ்டார் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி, செங்குந்தபுரம், கரூர் 
22. என்.பாலுசாமி - தலைமை ஆசிரியர், மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, பீளமேடு,கோவை.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி