பொது அறிவு - கேள்வியும் பதிலும் 06/09/2014

* மூளை கடினமான மண்டையோட்டினுள் பாதுகாப்பாக அமைந்துள்ள பகுதிக்கு பெயர் - கிரேனியம்
* மூளையைச் சுற்றியுள்ள மூன்று உறைகளின் பொதுவான பெயர் - மெனின்ஜஸ்
* மனித மூளையில் உள்ள நரம்புச் செல்களின் எண்ணிக்கை - சுமார் 12000 மில்லியன்
* பிறந்த குழந்தையின் மூளையின் எடை - 380 கிராம்.
* பெருமூளையின் இரு கதுப்புக்களையும் இணைக்கும் நரம்பிழைத் தட்டின் பெயர் - கார்பஸ் கலோசம்
* பெருமூளையின் சாம்பல் நிறம் மற்றும் வெண்மை நிறப் பகுதியின் பெயர் - கார்டெக்ஸ் மற்றும் மெடுல்லா
* பெருமூளையின் அடிப்புறத்தில் உள்ள இரு பகுதிகளின் பெயர் - தாலமஸ், ஹைபோதாலமஸ்
* மனிதனில் காணப்படும் மூளை நரம்புகளின் எண்ணிக்கை - 12 இணை
* தண்டுவட இணை நரம்புரகளின் எண்ணிக்கை - 31 இணைகள்
* கண்ணின் விழித்திரையில் ஒளி உணர் செல்கள் - கூம்புகள் மற்றும் குச்சிகள்
* ஒருவருக்கு கண்தானம் செய்யும்போது கண்ணின் எப்பகுதி மாற்றிப் பொருத்தப்படுகிறது - கார்னியா
* இரத்த தானம் செய்யும்போது ஒரு யூனிட் இரத்தம் என்பது எவ்வளவு? 350 மி.லிட்டர்.
* கன்ஜங்டிவா என்பது - இமையடிப்படலம்
* கண் உறைகளில் நடு உறையின் பெயர் - கோராய்டு
* கண்களில் கார்னியாவிற்கும், லென்சிற்கும் இடையில் உள்ள திரவத்தின் பெயர் - அகுவஸ் ஹியூமர்
* கண்களின் உட்புறமாக லென்சிற்கும் விழித்திரைக்கும் இடையில் அமைந்துள்ள கூழ்மப் பொருள் - விட்ரியல் ஹியுமர்
* விழித்திரையின் மையத்தில் துல்லியமான பார்வைக்குக் காரணமான பகுதியின் பெயர் - மாக்குல்லா
* யுட்ரிகுலஸ், சாக்குலஸ் என்னும் இரண்டு உறுப்புக்களின் அமைவிடம் - உட்செவி
* மனித உடலின் மிகப்பெரிய சுரப்பி - கல்லீரல்
* கல்லீரல் மற்றும் கணையம் போன்றவற்றின் சுரப்புக்கள் சிருகுடலின் எப்பகுதியில் இணைகின்றன - டியோடினம்
* சிறுகுடலின் மூன்று பகுதிகளின் பெயர் - டியோடினம், ஜெஜீனம், இலியம்
* மனிதனின் இரைப்பையின் மூன்று பகுதிகள் - கார்டியாக் இரைப்பை, பண்டஸ் மற்றும் பைலோரஸ் இரைப்பை
* மனித உணவுக் குழலின் நீளம் - 22 செ.மீட்டர்
* மனிதனின் உள்ளுறுப்பு அமைப்பைப் பற்றி முதன் முதலில் தெளிவாக விளக்கியவர் - அன்ரியாஸ் வெசாலியஸ்
* அனாடமியா என்ற நூலின் ஆசிரியர் - மான்டினோ டிலூசி
* குழந்தைப் பருவத்தில் தோன்றும் முதல் தொகுப்புப் பற்களின் பெயர் - உதிர் பற்கள் அல்லது பால் பற்கள்
* அறிவுப் பற்கள் எத்தனை வயதிற்கு மேல் மனிதனுக்குத் தோன்றுகின்றன - 20 வயதிற்கு மேல்
* மனித உடலின் கடினமான பகுதியான எனாமல் பல்லின் எப்பகுதியை மூடியுள்ளது - டென்டைன்.
* நாளமுள்ள மற்றும் நாளமில்லாத பண்புகளைக் கொண்ட இரு பண்புச் சுரப்பி - கணையம்
* முதுகின் மேற்புறம் கழுத்தின் இருபுறமும் அமைந்துள்ள தசையின் பெயர் - ட்ரப்பீசியஸ்
* மனித செவியில் காக்லியா என்னும் உறுப்பு எதனுடன் இணைந்துள்ளது - சாக்குலஸ்
* முதுகின் பின்புற அகன்ற தசையின் பெயர் - லாட்டிஸ்மஸ் டார்சை
* பறவைகளின் மூச்சுக் குழலின் அடிப்புறத்தில் அமைந்துள்ள குரல் வரையின் பெயர் - சிரிங்கஸ்
* மனிதனின் மூச்சுக்குழலில் உள்ள குறுத்தெலும்புகளின் எண்ணிக்கை - 16 முதல் 20 வரை
* நூரையீரல்களைச் சுற்றியுள்ள கடற்பஞ்சு போன்ற உறையின் பெயர் - பிளியூரா
* இரு நூரையீரல்களின் நடுவில் உள்ள இடைவெளியின் பெயர் - மீடியாஸ்டினம்
* நரம்பு மண்டலத்தின் செயல் திறன் அலகுகளாக அமைந்துள்ளது - நியூரான்கள்
* இதயத்தை சுற்றியுள்ள மெல்லிய படலத்தின் பெயர் - பெரிகார்டியம்
* வலது புற ஆரிக்கிள், வெண்ட்ரிக்கிள் கருவிகளுக்கு இடையே உள்ள பாதுகாப்பு வால்வின் பெயர் - மூவிதழ் வால்வு
* மனித இதயத்தின் எடை - ஆண்கள் - 285 முதல் 340 கிராம் வரை, பெண்கள் - 247 முதல் 285 கிராம் வரை
* நுரையீரல் சிரைகள் இதயத்தின் எந்த அறைகளினுள் திறக்கின்றன - இடது ஆரிக்கிள்
* இடது புற ஆரிக்கிள், வெண்ட்ரிக்கிள்களுக்கு இடையே உள்ள வால்வின் பெயர் - ஈரிதழ் வால்வு
* கூம்பு வடிவமுடைய இதயம் அமைந்துள்ள இடம் - மீடியாஸ்டினம்
* இதயம், இரைப்பை, நூரையீரல் போன்ற உறுப்புக்களுடன் பரிவு நரம்புகள் பின் மூளையில் உள்ள எப்பகுதியில் இணைந்துள்ளன? - முகுளம்
* இரைப்பையில் சுரக்கப்படும் எந்த நொதி புரத்தின் செரிமானத்தைத் துவக்குகிறது - பெப்சின்
* மனிதனின் உடல் உள்ளுறுப்புக்களுள் மிகப் பெரியது - கல்லீரல்
* சுவாசிக்கும்போது அளவில் மாறுபடாத வாயு - நைட்ரஜன்
* லெக்கான் கோழி ஆண்டுக்கு எத்தனை முட்டைகள் வரை இடும் - 200
* ஈமு கோழியில் எத்தனை விழுக்காடு கொழுப்பு இல்லை - 98 சதவிகிதம்
* உருளைக்கிழங்கு மற்றும் பச்சை மிளகாய் எந்த நாட்டில் இருந்து இந்தியாவிற்கும் கொண்டு வரப்பட்டது - தென் அமெரிக்கா
* இதயத்தை நோக்கி இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய்களின் பெயர் - சிரைகள்
* இதயத்திலிருந்து இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய்களின் பெயர் - தமனிகள்
* டெல்டாயிடு தசைகள் காணப்படும் பகுதி - தோள்பட்டை
* மால்பீஜியன் உறுப்பின் குறுக்களவு - 0.2 மி,மீ
* யூஸ்யேசியன் குழல் காணப்படும் பகுதி - நடு செவி
* நுரையீரல் தமனி, பெருந்தமனிகளின் துவக்கத்தில் அமைந்துள்ள வால்வுகளின் பெயர் - அரைச்சந்திரன் வால்வுகள்
* சிறுநீரகத்தின் செயல் அலகாகிய நெஃப்ரான் அமைந்துள்ள பகுதி - கார்டெக்ஸ்
* சிறுநீரகத்தின் குழிந்த உட்புறத்தின் மையப்பகுதியின் பெயர் - ஹைலஸ்
* எலும்புச் தசையின் செயல் அலகு - சார்கோமியர்
* மாவுப் பொருட்களின் செரிமானத்தைத் துவக்குவதற்கு உமிழ்நீரில் அமைந்துள்ள நொதியின் பெயர் - உமிழ்நீர்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி