அஸிஸ்டெண்ட் சர்ஜன் காலிப் பணியிடங்கள்

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) தமிழ்நாடு அஸிஸ்டெண்ட் சர்ஜன் பணியிடங்களைத் தற்காலிகமாக நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலியிடங்கள்:
2176. இதில் 2142 இடங்கள், பொது மருத்துவத்தில் பட்டம் பெற்றவருக்கானவை. மீதமுள்ள 34 இடங்கள் பல் மருத்துவத்தில் பட்டம் பெற்றவருக்கானவை.
வயது:
01.07.2015 அன்று, எம்.பி.பி.எஸ். படித்தவர்கள் 35 வயதுக்குள்ளும் பி.டி.எஸ். படித்தவர்கள் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்.சி./ எஸ்.டி./ பி.சி. வகுப்பினருக்கு வயது வரம்புச் சலுகை இல்லை.
கல்வி:
பொது மருத்துவப் பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். பட்டமும், பல் மருத்துவப் பணியிடங்களுக்கு பி.டி.எஸ். பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
விண்ணப்பிப்பவர்கள் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்:
28.09.2014 அன்று காலை 10 மணி முதல் 12:30 மணி வரை.
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்:
சென்னை
விண்ணப்பக் கட்டணம்:
எஸ்.சி./எஸ்.சி. அருந்ததியர்/ எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.375. இதர பிரிவினருக்கு ரூ.750. இதை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். இந்தியன் வங்கி செலான் மூலமும் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்:
01.09.2014
விண்ணப்பக் கட்டணம் செலுத்தக் கடைசி நாள்:
03.09.2014

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி