பத்தாம் வகுப்பு படித்தோருக்கு வேலை (சி.ஐ.எஸ்.எஃப்.)


உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்தியத் தொழிற்சாலைப் பாதுகாப்புப் படையில் (சி.ஐ.எஸ்.எஃப்.) டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

காலிப் பணியிடங்கள்: 985. (இதில் முன்னாள் ராணுவத்தினருக்காக 100 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.)
பணியிடங்கள் விவரம்: முடிதிருத்துபவர் - 132, காலணித் தொழிலாளி-31, சமையல்காரர்-401, கார்பெண்டர்-21, எலக்ட்ரிஷியன்-2, மோட்டார் பம்பு உதவியாளர்-2, பெயிண்டர்-3, துப்புரவுத் தொழிலாளி-191, சலவைத் தொழிலாளி-173.
வயது: 01.08.2014 அன்று 18 வயதிலிருந்து 23 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும் கூடுதலாக வயது வரம்பு தளர்வு செய்யப்படும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையானப் படிப்பை முடித்திருக்க வேண்டும். குறிப்பிட்ட சில பணிகளுக்கு ஐஐடி படித்துள்ளவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.
உடல் தகுதி: பொதுப் பிரிவினர், எஸ்சி/எஸ்டி, ஓபிசியினர் ஆகியோருக்கு உயரம் 170 செமீ. மார்பளவு 80-85 செ.மீ. கொண்டிருக்க வேண்டும். உயரத்துக்கேற்ற எடையும் கொண்டிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை: தகுதித் தேர்வு, உடல் திறன் தேர்வு, டிரேடு டெஸ்ட், மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: அஸிஸ்டண்ட் கமாண்டன்ட் பெயரில் குறிப்பிட்ட அஞ்சல் நிலையத்தில் மாற்றத்தக்க ரூ. 50 மதிப்புள்ள போஸ்டல் ஆர்டர். எஸ்.சி., எஸ்.டி. முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
http://www.cisfrecruitment.org , www.cisf.gov.in ஆகிய இணையதளங்களில் கிடைக்கும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கி, பூர்த்திசெய்து, போஸ்டல் ஆர்டருடன் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 16.09.2014. இந்தியாவின் வட கிழக்குப் பகுதியினருக்கு 23.09.2014.
கூடுதல் விவரங்களுக்கு: http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19113_7_1415b.pdf

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி