முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான இறுதி தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான இறுதி தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கப்பள்ளி துறைகளில் 11 ஆயிரம் பணியிடங்கள் இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மாதம் அறிவித்தது. இதையடுத்து 2012 மற்றும் 13 ஆம் ஆண்டுகளில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களிடம் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான இறுதித் தேர்வு பட்டியலை தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதேபோல், கடந்த ஆண்டு ஜூலை 21ஆம் தேதி நடைபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதித் தேர்வு பட்டியலும் , ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் பாடத்தில் தேர்வான 543 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஏற்கனவே பணி நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆங்கிலம், கணிதம், வரலாறு உள்ளிட்ட 6 பாடங்களின் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுப் பட்டியல் வெளியாகியுள்ளது. தேர்வுப் பட்டியலை வெளியிட வலியுறுத்தி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த வாரம், ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு பட்டியலை விவரங்களை www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வானோர், பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கப்பள்ளி துறைகள் மூலம் பணிநியமனம் செய்யப்படுவர்.


Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி