டி.இ.ஓ.,பதவி உயர்வு பரிந்துரை : தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி - தினமலர்

டி.இ.ஓ., பதவி உயர்வு பரிந்துரை பட்டியலில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 46 பேருக்கு, சென்னையில், நாளை முதல்,நிர்வாக பயிற்சி அளிக்கப்படுகிறது. 

மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) பதவிக்கு முன்னுரிமை அடிப்படையில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்களில் சிலருக்கு நிர்வாக அனுபவம் இல்லாததால், அரசு நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் தொய்வு ஏற்படுகிறது. பதவி உயர்வு அளிக்கப்படுவதற்கு முன், இத்தலைமை ஆசிரியர்களுக்கு, சென்னை மாநில கல்வியியல் மேலாண்மை நிர்வாக பயிற்சி நிறுவனம் (குஐஉMஅகூ) மூலம், 15 நாட்கள் நிர்வாகப்பயிற்சி அளிக்க, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, நாளை முதல் ஆக.,16 வரையும், பின்னர் ஆக.,18 முதல் 22 வரையும் 11 நாட்களுக்கு, இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

இப்பயிற்சியில், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 19 பேர், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 27 பேர் என 46 பேர் கலந்து கொள்கின்றனர். இத்தகவல்கள், பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி